பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து 43 ஐந்துமாக இருபத்தைந்து எழுத்துக்கள் இரண்டி லும் உள்ளனவாம். இவ்வொற்றுமை எவ்வாறு ஏற்பட்டுள்ளது? இரண்டும் வெவ்வேறு இனத்தைச் சார்ந்த மொழிகள்; வெவ்வேறு இலக்கண மரபை உடையன. அங்ஙனமாகவும் இரண்டிலும் இருபத் தைந்து எழுத்துக்கள் ஒன்றாக அமைந்த தன்மை வியத்தற்குரியது. ஒன்று பிறிதொன்றிலிருந்து கடன் பெற்றிருந்தாலன்றி இவ்வாறு ஒற்றுமையாக அமை தல் இயலாது. எது எதிலிருந்து கடன் பெற் றுள்ளது? தமிழில் உள்ள எழுத்துக்கள் தொல்காப்பியர் கருத்துப்படி முப்பத்துமூன்றே. அந்த முப்பத்து மூன்றில் இருபத்தைந்து ஆரியத்தில் உள்ளவாறே உள்ளன. உயிரில், எ, ஒ, என இரண்டும் மெய்யில் ற, ன, ழ என மூன்றும் ஆய்தம், குற்றியலிகரம், குற்றியலுகரம் எனச் சார்பெழுத்து மூன்றும் ஆக எட்டெழுத்துக்களே தமிழுக்கே உரியவாய் உள்ளன. ஆரியர் தமிழரோடு கூட்டுறவு கொள்வதற்கு முன்பே, தமிழர் பண்பட்ட இலக்கண அமைப்பை உடைய மொழியைப் பெற்றிருந்தனர் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்; தொல்காப்பியமே தக்க சான்றாகும். ஆதலின் தமிழ் ஆரியத் தொடர்பு கொள்வதற்கு முன்பு எ, ஒ, ற, ன, ழ, ஆய்தம், குற்றியலிகரம், குற்றியலுகரம் எனும் எட்டெழுத் துக்களையே பெற்றிருந்தது. ஆரியத் தொடர்பு கொண்ட பின்னர் தான் எஞ்சிய இருபத்தைந்து எழுத்துக்களையும் ஆரியத்திடமிருந்து கடன்பெற்றுக் கொண்டது என்று கூறுவது நகைப்புக்குரியது. அன்றியும் தமிழ் ஆரியத்தைத் தழுவி தன் எழுத் தமைப்பைப் படைத்து உருவாக்கியிருந்தால், பிற்காலத்தில் தெலுங்கு, மலையாளம் செய்து