பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-44 தொல்காப்பிய ஆராய்ச்சி கொண்டது போல், ஆரியத்தினை முழுதும் பின்பற்றி அமைத்துக் கொண்டிருக்குமே. அவ்வாறு செய்து கொள்ளவில்லையே. ஆதலின் அறியக் கிடப்பது என்ன? ஆரியம்தான் தமிழை நோக்கித் தன் எழுத்தமைப்பை ஆக்கிக்கொண்டிருக்க வேண்டுமே யன்றி, தமிழ், ஆரியத்தை நோக்கி அமைத்துக்கொண்டது அன்று எனும் உண்மையே. தமிழ் எழுத்தமைப்பைக் கண்ணுற்ற ஆரியர் தம் மொழியின் ஒலிக் கூறுகட் கேற்பப் புதிய வடிவங் களையும் படைத்துத் தம் நெடுங்கணக்கை அமைத்துக் கொண்டனர் என்று கூறலே உண்மைக் குப் பொருந்துவதாகும். அவ்வாறு அவர்கள் திருத்தி அமைத்துக்கொண்டது தொல்காப்பியர் காலத் திற்குப் பின்னர்தான். ஏனெனில் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே இது நிகழ்ந்திருப்பின் பவணந்தியார் சுட்டிக் கூறியிருப்பதுபோல் தொல். காப்பியரும் சுட்டிக் கூறியிருப்பர். தொல்காப்பியர் காலத்தில் ஆரிய மொழியின் ஒலிக்கூறுகள் தமிழ் மொழியினின்றும் வேறுபட்டிருந்தமையால் தான் அவை தமிழில் பயிலுங்கால் தமிழோசை பெற்றே பயில வேண்டும் என்று விதித்தனர். -வரி வடிவங்கள் 1 தமிழ் நெடுங்கணக்கின் வரி வடிவங்கள் காலம் தோறும் மாறுபட்டே வந்து இன்றுள்ள நிலையை அடைந்துள்ளன. இன்றும் எழுதுவோர் போக்கிற் கேற்பவும் அழகுணர்ச்சிக் கேற்பவும் வரிவடிவங்கள் தோற்றமளிக்கின்றன. அச்செழுத்துக்களில்கூட வரி வடிவ வேற்றுமைகளைக் காணலாம். தமிழ் எழுத்துக் களின் வரிவடிவங்களின் தோற்றம் வளர்ச்சிபற்றிப் 1. வடசொற் கிளவி வடவெழுத்து ஓஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.- தொல். நூற்பா:-401