பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து 47 கொண்டுள்ள வரிவடிவங்களைப் புதியனவாகக் கணக்கிடுதல் பொருந்தாது. அவ்வாறு கணக்கிடுவ தானால் ஆங்கில எழுத்துக்கள் இருபத்தாறு என்பதற்கு மாறாக 'நூற்று நான்கு என்று கூறுதல் வேண்டும். (சிறிய எழுத்து 26, பெரிய எழுத்து 26, அச்செழுத்து 26, கையெழுத்து 26) ஆதலின் வரிவடிவங்களில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களைக் கொண்டு புதிய வரிவடிவங்கள் என்று கருதி தமிழ் வரிவடிவங்கள் இருநூற்று நாற்பத்தேழு என்பதனை விட்டொழித்தல் வேண்டும். இத்தமிழ் முறையால் எவ்வளவோ நன்மைகள் உள். காலம், இடம், முயற்சிகளில் சிக்கனமும் கற்பதில் எளிமையும், ஒலிப்பு முறையில் ஒற்றுமை யும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. மெய் எழுத்துக்கள் புள்ளி பெற்று நிற்கும்; புள்ளி நீங்கினால் அகர உயிரோடு கூடிய மெய்யாகும். தொல்காப்பியர் காலத்தில் எ, ஒ புள்ளி பெற்றே நின்றன. புள்ளியில்லையேல் ஏ.ஓ. என நெடில் களாயின. மகரக்குறுக்கம் 'ம்' என உட்புள்ளியும் பெற்று நின்றது. இப்பொழுதுள்ள எ, ஒ, ஏ, ஓ முறை வீரமாமுனிவரால் ஆக்கப்பட்டது என்பர். மாத்திரை : எழுத்துக்களை ஒலிப்பதற்கு வேண்டிய கால அளவைக் கணித்தறிந்திருந்தனர் நம்முன்னோர். அடிப்படை அளவை மாத்திரை என்று அழைத் தனர். ஒரு முறை கண்ணிமைப்பதற்கு வேண்டிய காலமோ கை நொடிப்பதற்கு வேண்டிய காலமோ ஒரு மாத்திரையின் அளவுக் கூறாகும். மெய்யெழுத் திற்கு அரை மாத்திரை உண்டு. ஆனால் அது உயிரோடு சேருங்கால் தன் அளவை இழந்துவிடு கின்றது. உயிர்க்குரிய அளவே உயிர்மெய்க்குரிய