பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தொல்காப்பிய ஆராய்ச்சி அளவாகும். குறில் எழுத்து ஒரு மாத்திரையும் நெடில் எழுத்து இரண்டு மாத்திரைகளும் பெறும். மூன்று மாத்திரைகள் பெறும் ஓரெழுத்துத் தமிழில் இல்லை.வழக்கிடத்தும் செய்யுளிடத்தும் ஓரெழுத்து இரண்டு மாத்திரைகளுக்கு மேலும் ஒலித்தலை விரும் பினால் எவ்வளவு மாத்திரை வேண்டுமோ அவ்வளவு மாத்திரைகட்கு ஓரளவுள்ள அதற்கினமான குறில் எழுத்தினைக் கூட்டி எழுதுதல் வேண்டும். கா எனும் எழுத்திற்கு இரண்டு மாத்திரை உண்டு. நான்கு மாத்திரை அளவுள்ளதாக ஒலிக்க வேண்டு மானால் காஅஅ' என இரண்டு அகரங்களைச் சேர்க்க வேண்டும்.1 fr ୧ பிற்காலத்தில் பவணந்தியார் வேறு விதமாகக் கூறியுள்ளார் நெட்டெழுத்தேழும் தத்தமக்குரிய இரண்டு மாத்திரையில் மிக்கு ஒலிக்கும். அவ்வாறு மிகுந்து ஒலிப்பதைக் காட்டுவதற்கு அடையாளமாக அவற்றிற்கினமாகிய குற்றெழுத்துக்கள் வரிவடிவில் வரும்" என்று கூறுகின்றார்.(நன்னூல் எழுத்தியல் சூ-36). 'கா அஅ என்பதில் 'கா' வே நான்கு மாத்திரை ஒலிக்கும். 'கா'வுக்கு இயல்பாக இரண்டு மாத்திரையுண்டு. எஞ்சிய இரண்டு மாத்திரைகளை அறிவிப்பதற்கு இனமாம் குறில் 'அ' இருமுறை எழுதப்பட்டுள்ளது. இங்கு 'அ' அடையாளமாக மட்டுந்தான் வந்துள்ளது. தனக்குரிய ஒரு மாத் திரையை இழந்து நிற்கின்றது. இவ்வாறு கூறுவதி னும் தொல்காப்பியர் கூறும் முறையே சிறப்புடைய தாக இருக்கின்றது. எழுத்துக்களைக் குறில் என்றும் நெடில் என்றும் பிரித்து குறில் ஒரு மாத்திரையும், நெடில் இரண்டு மாத்திரையும் பெறும் என்று 1.நீட்டம் வேண்டின் அவ்வள புடைய கூட்டி எழுதல் என்மனார் புலவர் - தொல். நூற்பா:- 6.