பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து 49 வகுத்துவிட்டு, நெடில் எவ்வளவு மாத்திரை வேண்டு மாயினும் பெறலாம் என்பது பொருத்தமின்று அன்றோ? குற்றிய விகரமும், குற்றியலுகரமும், ஆய்தமும் ஒவ்வொன்றும் அரை மாத்திரையே பெறும். எழுத் துக்கள் தமக்கு வரையறுக்கப்பட்ட மாத்திரையைக் கடந்து ஒலிப்பதற்குரிய இடம் இசைத் தமிழின் கண்ணதாகும். இசைத் தமிழ் இலக்கணத்தைத் தொல்காப்பியர் நரம்பின் மறை' என்று குறிப்பிடு கின்றார். இசைக் கருவிகளுள் நரம்புக் கருவியும் ஒன்று. இசைத் தமிழ் இலக்கணத்தை நரம்பின் மறை என்று கூறுவதால் நரம்புக்கருவி (யாழ்) அக் காலத்து மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற் றிருந்ததென்றும், இசைக் கருவிகளுள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது நரம்புக் கருவியாய் இருத் தல் வேண்டுமென்றும் கருத இடமுண்டு. எழுத்தின் வகைகள்: மெய் எழுத்துக்களை முதல் என்றும் சார்பென்றும். உயிர் என்றும், மெய் என்றும், குறில் என்றும், நெடில் என்றும் வகைப்படுத்தினர். யெழுத்துக்களை வல்லினம், மெல்லினம், இடையினம் என்று பாகுபடுத்தினர். பின்னர் பயன்படும் தன்மை கருதி 'சுட்டு' என்றும், 'வினா' என்றும் பெயரிட்டுப் பிரித்துக் காட்டினர். சுட்டு என்பன அ,இ,உ வாம். அந்த, இந்த, உந்த என்பன அவற்றின் பொரு ளாம். வினாவைக் குறிப்பன ஆ, ஏ.ஓ என்பனவாம். எ.யா,கூறப்படவில்லை. அவை (ஆ,ஏ,ஓ) போன்று சொற்களில் தனித்துச் சேர்ந்து வினாப்பொருளை யுணர்த்தாமையாலும், எகரம் வினாப்பொருள் மட்டு மன்றிப் பிற பொருளும் தருகின்றமையானும் என்று அறியற் பாற்று. அன்றியும் தொல்காப்பியர் காலத் 4 1454