பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தொல்காப்பிய ஆராய்ச்சி தில் எ, யா இரண்டும் தனித்து வினாப் பொருளைத் தரும் வகையில் இருதிணை ஐம்பால்களிலும் பயில வில்லை யென்றும் அறியலாம். உரையாசிரியர்கள் " தன்னினம் முடித்தல்' என் பதனால் எகரமும் யகர ஆகாரமும் வினாப்பெறும் எனக் கொள்க" என்றனர். ஐ.ஒள இவை இரண்டும் ஒவ்வொன்றும் இரண்டு ஒலிகளால் ஆனவை. 'ஐ' என்று ஒலிப் பதற்கு 'அ இ' என்றோ. 'அய் என்றோ எழுதி ஒலிக் கலாம். ஒள என்று ஒலிப்பதற்கு 'அ உ' என்றோ, அவ்' என்றோ எழுதி ஒலிக்கலாம். தொல்காப்பி யரே இவ்வாறு கூறுகின்றார். பாடல்களில் எதுகை நோக்கி 'அய்யன்' என்றும் அவ்வை' என்றும் பயின்றிடக் காணலாம். ஆகவே சிலர் 'ஐ ஒள என்ற இரு எழுத்துக்களும் தமிழ் நெடுங்கணக்கி லிருந்து அகற்றப்பட்டு விடலாம் என எண்ணு கின்றனர். . தமிழ் நெடுங்கணக்கில் அ, இ, உ,எ,ஒ என்ற குறில்களும்,ஆ,ஈ,ஊ,ஏ,ஓ என்ற அவற்றிற் கொத்த நெடில்களுமே முதலில் தோன்றியிருக்கலாம். ஐ, ஒள என்ற இரண்டும் பிற்காலத்தில் சேர்க்கப்பட் டிருக்கலாம். ஆனால் பிற்கால மென்பது, தொல் காப்பியர் காலத்திற்கு மிக முற்பட்ட காலமாகும். தமிழ் மொழி நூலார் ஐ, ஒள என்ற இரண்டின் இன்றியமையாமையை அறிந்து படைத்துக் கொண் டனர். இவை இரண்டையும் பகுதிகளாகக் கொண்டு பல சொற்கள் உருவாகியுள்ளன். ஆதலின் இவை இரண்டையும் தமிழ் நெடுங்கணக்கிலிருந்து இனி அகற்றல் முடியாது. இவ்விரண்டு எழுத்துக்களும் ஆரிய மொழியைப் பின்பற்றி அமைத்துக் கொள்ளப்பட்டன என்று