பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தொல்காப்பிய ஆராய்ச்சி தமைப்பையும் ஆராய்ந்து அறியாது மேற்போக்காக அறிந்த அளவிலேயே, தமிழ் மொழி எழுத்துக் குறை பாடுடையது; அதனைத் திருத்தவேண்டும் என்று வாய் கூசாது கூறிவருகின்றனர். தமிழ் மொழியின் எழுத்தமைப்பு முற்றிலும் செப்பமுற்ற வகையில் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே அமைந்து விட்டது. அவ்வமைப்பில் ஒன்றைக் கூட்டவோ குறைக்கவோ இயலாத நிலையில் திருத்தமுற்று விளங்குகின்றது. F, h. z போன்ற எழுத்துக்கள் தமிழில் உண்டா? இவை இல்லாமை தமிழுக்குக் குறைபாடன்றோ என் பர் சிலர். இவ்வொலிகளைக் குறிக்கத் தனியான வரி வடிவங்கள் தமிழில் இல்லை என்பது உண்மையே. ஏன் இல்லை? தமிழ் மொழியில் அவ்வொலிகள் இல்லை. ஒலிகள் இல்லாதபோது அவற்றைக் குறிக்க வரிவடி வங்கள் எவ்வாறு தோன்றும்? வேற்று மொழிகளில் உள்ள ஒலிகளைத் தமிழில் அவ்வாறே ஒலிக்க வேண்டுமன்றோ? அவ்வாறு ஒலிக்க விரும்புங்கால் முடியவில்லையே. அவ்வாறு ஒலிப்பதற்காகத் தமிழ் மொழியில் இல்லாத பிற மொழிகளின் ஒலிகட்கு வரிவடிவங்கள் படைத்துக் கொள்ள வேண்டுமன்றோ? என வழக்காடுபவர் உளர். உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருக் கின்றன. அவ்வந்நாட்டுத் தட்ப வெப்பச் சூழ்நிலைக் கேற்ப மொழி ஒலிகள் உருவாகி அவற்றிற்கு வரி வடிவங்கள் உண்டாகியுள்ளன. உலகின் ஒரு பகுதி யில் உள்ள மொழியின் ஒலிகட்கு, இன்னொரு பகுதி யில் உள்ள மொழியில் உள்ள வரிவடிவங்கள் இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தல் கூடாது. வேற்று மொழி ஒலிகளைத் தம் மொழியில் கூறுங்கால் தம் மொழிக் கேற்பவே திருத்தி வழங்குவர். ஆங்கிலத்