பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து 53 தில் ழ் இல்லை. ஆங்கிலேயர் 'தமிழ்' என்ற சொல்லைத் தமில்' (Tamil) என்றுதான் ஒலித்தனரே யன்றித் தமிழ் ஒலியைத் தம் மொழியில் ஏற்றுக் கொண்டு புதிய வரிவடிவம் படைத்தாரிலர். தம் மொழியைக் குறைபாடுடையதென்று கூறினாருமிலர். அங்ஙனமாகவும் நந்தமிழர் மட்டும் பிறமொழி ஒலி கட்குத் தமிழில் வரிவடிவங்கள் இல்லை என்று குறை பட்டுக் கொள்ளுதல் எவ்வாறு பொருந்தும்? தொல்காப்பியர் நமக்கு வழிகாட்டிச் சென்றுள் ளார். அவ்வழி உலகில் உள்ள பிறமொழியாளர் கடைப் பிடிக்கும் வழியோடு ஒத்துளது. தமிழர் களோடு முதலில் தொடர்பு கொண்ட வேற்று மொழி யாளர் வடமொழியாளர் ஆவார். ஒரு மொழியாளர் இன்னொரு மொழியாளரோடு கூட்டுறவு கொள் ளுங்கால் இருவர் மொழிச் சொற்களும் ஒன்றினில் ஒன்று கலக்க நேரிடுதல் இயல்பு. ஆகவே வட மொழிச் சொற்கள் தமிழிலும், தமிழ்மொழிச் சொற்கள் வடமொழியிலும் கலந்துள்ளன. அவ்வாறு கலக்குங்கால் நாம் கொள்ள வேண்டிய முறைபற்றித் தொல்காப்பியர் கூறியுள்ளார். வடமொழிச் சொற்களின் வடமொழி எழுத்துக் களை நீக்கிவிட்டுத் தமிழ் எழுத்துக்களால் தமிழ் ஒலி களோடு கூறவேண்டும் என்பதே அவர் காட்டும் நெறி. வடமொழிக்குக் கூறிய விதியே பிறமொழி கட்கும் பொருந்தும். இந் நெறியே எல்லா நாட்டு மொழியினராலும் பின்பற்றப்படும் ஒன்றாகும். மொழி நூல் முறைக்கும் ஒத்ததாகும். ஆங்கில மொழியிலும், ஃபிரெஞ்சு மொழியிலும், செர்மன் மொழியிலும் வரிவடிவங்கள் பெரும்பாலும் ஒத்துள்ளன. ஆயினும் அவ்வம்மொழிச் சொல், 1.தொல்: நூற்பா 401.