பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தொல்காப்பிய ஆராய்ச்சி வேற்று மொழியில் ஆளப்படுங்கால் ஒலி வேறுபாட் டுடன்தான் ஆளப்படுகின்றது. ஆங்கில மொழிச் சொல் ஒன்று ஃபிரெஞ்சிலும் செர்மனியிலும் பயிலுங் கால், வரிவடிவ ஒற்றுமையிருந்தும், பிரஞ்சு ஒலி நுட்பமும், செர்மன் ஒலி நுட்பமும் வேண்டுமளவுக்கு ஒலி மாறுபாட்டைந்தே பயில்கின்றது. ஆதலின் தமிழில் வேற்று மொழிச் சொற்கள் தமிழில் இல்லா ஒலியுடன் பயிலத் தொடங்குங்கால் தமிழோசை கொடுத்துத் தமிழாக்கியே கூறல் வேண்டும். தமிழ் வரிவடிவ (எழுத்து)க் குறைபாடுடையது என்று கூறல் கூடாது. பொது எழுத்து: பாரத நாட்டு மக்களிடையே ஒற்றுமை வேண்டும் என்பதன் பேரால் பாரத நாட்டு மொழிகட்கெல்லாம் ஒரே வரிவடிவம் (எழுத்து) இன்றியமையாதது என முழக்கமிடுகின்றனர் சிலர். எழுத்தொற்றுமையால் கருத்தொற்றுமை ஏற்படும் என்பது வெறும் கற்பனைத் தோற்றம். இன்று எழுத்தொற்றுமையுடைய ஒரே மொழி பேசும் மக்க ளிடையே பூசலும் போரும் நிகழாமல் இல்லையே. ஆதலின் ஒற்றுமையின் பேரால் இந்திய மொழிகட் கெல்லாம் ஒரே வரிவடிவத்தை ஏற்படுத்த முனைவது இயற்கையொடு முரண்பட்ட செயலாகும். ஒரே மொழிச் செல்வாக்கை விரிவு படுத்தி நிலைபெறச் செய்வதற்குரிய மறைமுக ஏற்பாடென்றே தெளிதல் வேண்டும். பொது வரிவடிவ முயற்சி வெற்றிபெறு மேல் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும், தேவார திருவாசகங்களும் தமிழர்க்குப் பயன்படாமல் மறைந்து ஒழியும். தமிழும் உலக வழக்கிலிருந்து ஒழிந்து இறந்து விடும். ஆரிய மொழி வரிவடிவத் தைப் பெற்றிராத பிற மொழிகளின் நிலையும்