பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து 55 அஃதேதான் என்பதில் ஐயமின்று. தொல்காப்பியர் தமிழர்க்கு அளித்து, இன்று உலக மொழி நூல் அறிஞர்களால் வியந்து பாராட்டப்பெறும் தமிழ் எழுத்திலக்கணம். தமிழர்க்குப் பயன்படாது அழிவுற்று மறையும் நிலைக்குக் கொண்டு செல்லும் எச்செயலிலும் தமிழர்கள் ஈடுபடுதல் தம்மைத் தாமே மாய்த்துக்கொள்ளும் செயலுக்கொப்பாகும் என்று உணர்தல் வேண்டும், தமிழகப் பெரியோர். சொற்களில் எழுத்து நிலை: எழுத்துக்களால் ஆக்கப்பட்டது சொல். உள்ளக் கருத்தை வெளிப்படுத்துவதற்கு. உரு வாக்கப்பட்ட சொற்களைப் பகுத்து எழுத்துக்களை உருவாக்கி வகைப்படுத்தினர். பின்னர்தான் சொற்களில் உள்ள எழுத்துக்களை ஆராயத் தொடங்கினர். இவ்வாராய்ச்சி அண்மையில்தான் தொடங்கப்பட்டுள்ளது மேலை நாடுகளில். தமிழில் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தொடங்கப் பட்டுவிட்டது. தமிழர்களின் மொழி நூலறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் சிறந்த சான்றாக விளங்குகின்றது இவ்வெழுத்து நிலை ஆராய்ச்சி. நூற்றாண்டுதோறும் மொழி அடைந்துள்ள மாறுபாட்டைக் கணித்தறிவ தற்கும் துணைபுரிகின்றது இவ்வாராய்ச்சி. மொழி முதல் எழுத்துக்கள்: பன்னிரண்டு உயிரும் மொழி முதலாக வரும். மெய்யெழுத்துக்கள் உயிர்களோடு சேர்ந்துதான் மொழி முதலாக வரும். தனிமெய், மொழி முதலாக வராது. தனி மெய், மொழிக்கு முதலில் வந்துள்ள சொல் தமிழ் வழக்கில் இடம் பெறுமேல் அச்சொல் தமிழ்ச் சொல் அன்று என்று தெள்ளிதில் உணரலாம். ஸ்தலம்' என்ற சொல் சிலர் உரையாடலில் இடம் பெறுகின்றது. இது "