பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தொல்காப்பிய ஆராய்ச்சி தமிழ்ச் சொல்லன்று. மெய்கள் உயிர்களோடு சேர்ந்து மொழிக்கு முதலில் வருங்கால், எல்லா மெய்களும் எல்லாவுயிர்களோடும் சேர்ந்து வாரா. க்,த்,ந்,ப்,ம் என்னும் ஐந்து மெய்களும் பன்னி ரண்டு உயிர்களோடும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும். பிறமெய்கள் எல்லாம் சிற்சில உயிர்களோடு தான் சேர்ந்து வரும். ச்' என்ற மெய் அ, ஐ, ஒள எனும் மூன்று உயிர்களோடு அன்றிப் பிற உயிர்களோடு சேர்ந்து வரும் என்று கூறுகின்ற நூற்பா காணப்படு கின்றது. .

  • சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அ,ஐ, ஒள எனும் மூன்றலங் கடையே" என்பது அந்நூற்பா. ஆனால் ச'வை முதலாக வுடைய தனித் தமிழ்ச் சொற்கள் எண்ணற்றன தமிழில் உள்ளன. சட்டி, சட்டம், சண்டை, சணல், சமட்டு, சமம், சரடு, சருகு, சழக்கு என்பன அவற்றுள் சில. இவை யெல்லாம் தொன்றுதொட்டு வருவனவே யன்றி இன்று நேற்றுத் தோன்றியன அல்ல. அங்ஙனமிருக்கவும் தொல்காப்பியர் அவ்வாறு கூறியிருப்பாரா என்று ஆராய்தல் வேண்டும். இந் நூற்பாவை ஏடு பெயர்த்து எழுதியோர் திருத்தி இருக்கவேண்டும் என்பர். ஈற்றடிக்கு அவை ஒள என்னும் ஒன்றலங் கடையே" என்ற பாட வேறுபாடும் காட்டுவர். ஆதலின் இந்நூற்பா
  • சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே

68 " அவை 'ஔ' என்னும் ஒன்றலங் கடையே" என்றிருத்தல் வேண்டும் என்பர். ஆனால் நூற்பா அமைந்துள்ள நிலைமையில், சகரத்தை முதலிலே கொண்டுள்ள சொற்கள் தமிழில் தோன்றுவதற்கு முன்னர் தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டுமென்று கொள்ளுதலே ஏற்புடைத்து. 'ஐ'