பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து 57 யோடு சேர்ந்து 'சை' என்று வெறுப்பை அல்லது மாறுபாட்டை உணர்த்தும் ஒலிக்குறிப்பாக வழங்கி வருவதை நாம் அறிவோம். ச் ஒளவோடு மட்டும் தான் சேர்ந்து வராது. 'சௌ' முதலாக வரும் சொற் கள் எல்லாம் வேற்றுமொழிச் சொற்களே. செளக் கியம், சௌபாக்கியம், செளந்திரியம் என்பனவெல் லாம் இன்று சிலர் பயன்படுத்தினாலும் தமிழ்ச் சொற் கள் அல்ல. இவைகளால் நலம், செல்வம், அழகு முதலிய நற்றமிழ்ச் சொற்கள் வழக்கிழக்கும் நிலையை அடையத் தொடங்கின. 'வ்' எனும் மெய் எழுத்து உ, ஊ, ஒ, ஓ என்னும் நான்கு உயிர்களுடன்கூடி மொழிக்கு முதலாக வருவ தில்லை.வு.ஆ.வொ, வோ என்பன ஒலிப்பதற்கு எளிதாக இன்மையின் இவைகளை முதலாகக் கொண்டு சொற்கள் தோன்றவில்லை போலும். 'ஞ்' எனும் மெய் ஆ, எ,ஓ எனும் மூன்று உயிர் களுடன் கூடி மொழிக்கு முதலாக வரும் என்றனர் தொல்காப்பியர். ஆனால் 'ஆ' வருகின்ற 'ஞாலம் என்ற சொல் இலக்கிய வழக்கில்மட்டும் உளது. 'எ' வருகின்ற ஞெண்டும்', 'ஒ' வருகின்ற 'ஞொள்கிற்றும் வழக்கிழந்து விட்டன. பவணந்தியார் காலத்தில் ஞமலி' என்ற சொல் வழக்கிலிருந்திருக்க வேண்டும். அதனால் 'அ' என்பதனுடனும் 'ஞ்' மொழி முதலா கும் என்றார். 'ய்' எனும் மெய் 'ஆ' வோடுதான் கூடிவரும் அ (யவனர்).உ (யுக்தி), ஊ (யூகம்), ஓ (யோகம்). ஒள (யௌவனம்) என்னும் உயிர்களோடு கூடிவரும் சொற்கள் தமிழ்ச் சொற்கள் அல்ல. பிற மெய்கள் (ங, ட, ண, ர, ல, ழ, ள, ற, ன.) மொழிக்கு முதலில் வாரா. ஆயினும் தம்மைப்பற்றிக் குறிப்பிடும் போது முதலாக வரும்.