பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மொழி இறுதி எழுத்துக்கள்:. தொல்காப்பிய ஆராய்ச்சி ஒளகாரம் ஒழிந்த ஏனைய பதினோரு உயிர்களும் சொற்களின் இறுதியில் வரும். ஒளகாரமும் 'க்' 'வ்' எனும் மெய்களோடு ஓரெழுத்து ஒரு மொழியாக வரும். 'எ' எம்மெய் யோடும் கூடி ஈறாகாது. 'ந்' எனும் மெய்யோடு மட்டும்தான் ஈறாகும். எனும் இரண்டும் 'ஞ்' எனும் மெய்யோடு வாரா. உ','ஊ' எனும் இரண்டும் 'ந்', 'வ்' எனும் மெய்களோடு வருதல் இல்லை. 'உ, எனும் உயிர் 'ச், எனும் மெய்யோடு கூடிவருங்கால் இரண்டே சொற் களில்தான் வரும் என்றார். 'உச்சகாரம் இருமொழிக் குரித்தே'. உரையாசிரியர் நச்சினார்க்கினியர் 'உசு. 'முசு' எனும் இரண்டு சொற்களை மட்டும் எடுத்துக் காட்டி பசு" என்பே தோ எனின் அஃது ஆரியச் சிதைவு" என்றார். 'பசு' எனும் சொல் தமிழ் மக்கள் அனைவரும் வழங்கிவரும் சொல்லாகும். ஆன்* என்பன இலக்கியச் சொற்களாகவே உள்ளன. பசு என்பது தமிழ்ச் சொல்லே ஃபசுமை' என்பதனடி யாகத் தோன்றியிருத்தல் வேண்டும். 'பு' ஈரெழுத்து ஒரு மொழியில் வருங்கால் ஒரே சொல்லில்தான் ஈறாக வரும். அச்சொல் 'தபு' என்பதாகும். 'தபு' தன் வினையாகவும் பிறவினையாகவும் இருபொருளில் வரும். 'தபு' என்று படுத்துக்கூற (மெதுவாகச் சொல்ல) 'நீ சா' என்னும் பொருளதாய்த் தன் வினையாகும். 'தபு' என்று எடுத்துக்கூற (உரப்பிச் சொல்ல) 'சாவப்பண்ணு' என்னும் பொருளதாய்ப் பிறவினை யாகும். அசையழுத்தத்தால் (Accent) பொருள் வேறு படும் முறை தமிழிலும் உண்டு என்பதற்கு இஃ தொரு சான்றாகும். மெய்யெழுத்துக்களில் வல்லினம் ஆறும் மொழிக்கு இறுதியாக வருதல் இல்லை. மெல்லினத்