பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து 59 திலும் 'ங்' வருதல் இல்லை. ஏனைய பதினோரு மெய் களாம் ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்பன சொல்லிறுதியில் வரும். அவ்வாறு வருங்கால் 'ந் இரண்டே சொற்களிலும், 'ஞ்' ஒரே சொல்லிலும் வ்' நான்கே சொற்களிலும் வரும் என்று அறுதி யிட்டுக் கூறுகின்றார் ஆசிரியர். . 'ம்', 'ன்' என்பன சில சொற்களில் ஒன்று வந்த இடத்தில் இன்னொன்று வந்து வழங்கும். நிலம்- நிலன், கலம் - கலன், நலம் - நலன் என்பன போன்று வருதல் காண்க. இவ்வாறு மயங்கி வராத னகர ஈற் றுச் சொற்கள் ஒன்பது என்று கூறுகின்றார். அவை, எகின், செகின், விழன்,பயின், குயின், அழன், புழன்,கடான், வயான் என்பன என்று எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இவ்வாறெல்லாம் கூற வேண்டுமெனின், வரையறுத்துத் துணிந்து தொல்காப்பியரின் அளப் பரும் தமிழ்ப் புலமையும் ஆராய்ச்சியும் எவ்வளவு பரந்து விரிந்து ஆழ்ந்து நுணுகிச் சென்றிருக்க வேண்டும் என்று உய்த்துணரலாம். மொழியின் நடுவில் வருவன : சொற்களின் முதலிலும் இறுதியிலும் வரும் எழுத்துக்களை ஆராய்ந்தோம். இனிச் சொல்லின் நடுவில் வருவன யாவையென ஆராய்வோம். சொல்லின் நடுவில் வருவன எல்லாம் மெய்களும் உயிர் மெய்களும் ஆம். அளபெடைச் சொற்களில் மட்டுமே உயிர் சொல்லின் இடையில் வரும். மெய் களும் உயிர் மெய்களும் எவ்வாறு இணைந் து வருகின்றன என்பதை நன்கு ஆராய்ந்து கூறி யுள்ளார்.