பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ர்,ழ், என்ற இரண்டும் தொல்காப்பிய ஆராய்ச்சி தம்முன்தாம் வருதல் இல்லை. பிற மெய்கள் எல்லாம் தம்முன் தாம் வரும். ர்.ழ் எனும் இரண்டும் பிற மெய்களோடு வரும் ஆர்ப்பு, வாழ்க்கை) க், ச், த், ப் என்பன பிற மெய்களோடு வருதல் இல்லை. தம்மோடு தாம் தான் வரும். ங, ஞ, ண, ந, ம, ன எனும் மெல்லின மெய் கட்குப் பின்னர் அதனதனுக்குரிய வல்லின மெய்கள் வரும் (அங்கு, அஞ்சு, கண்டு, பந்து, அம்பு, கன்று) ட், ற், ல், ள்,என்னும் மெய்களுக்குப் பின்னர் க, ச, ப எனும் மூவெழுத்துக்களும் வரும். . கட்கம், கட்சி, தட்பம் ட் : ற் : கற்க. முயற்சி, வெற்பு ல்: செல்க, வல்சி, செல்ப ள் : கொள்க, நீள்சினை, கொள்ப ல்,ள், என்பவற்றின் பின்னர் ய, வ, என்பனவும் வரும். கொல்யானை, செல்வம், வெள்யாது, கள்வன், ண, ன என்பவற்றின் பின்னர் க,ச,ஞ,ப,ம,ய,வ என ஏழும், ஞ, ந, ம, வ என்பனவற்றின் பின்னர் யவும், ம் என்னும் மெய்யின் பின்னர் 'வ' வும் வரும். ய், ர், ழ் என்னும் மெய்யின் பின்னர், க, த, ந, ப,ம,ச,வ,ஞ,ய என்பன வரும். இவ்வாறு கூறப் பட்டுள்ளனவற்றுள் சில இக்காலத்து வழக்கில் இல்லை. எடுத்துக்காட்டுகளை இலக்கண நூல்களால் அறியலாம். சார்பெழுத்துக்கள் : குற்றியலிகரம், குற்றிய லுகரம், ஆய்தம் என்ற மூன்றும் சார்பெழுத்துக்கள் எனப்பட்டன. குற்றிய