பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து 61 லிகரமும் குற்றிய லுகரமும் தனி வரிவடிவங்கள் அற்றன. சொற்களிடையே பிற எழுத்துக்களைச் சார்ந்தே இவை தோன்றுவன. . குற்றியலிகரம் கேண்மியா, சென்மியா போன்ற சொற்களில் வந்துள்ள மியா என்னும் முன்னிலை அசைச் சொல்லின் 'ம்' மெய்யைச் சார்ந்துவரும். குற்றிய லுகரம் வந்துள்ள சொல்லை அடுத்து யகரத்தை முதலாகவுடைய சொல் வந்தால் குற்றிய லுகரம் குற்றிய லிகரமாகத் திரியும். விறகு + யாது = விறகியாது. 'கி'யில் வந்துள்ள இ குறைந்த ஓசையை உடையது. . குற்றிய லுகரம் நெட்டெழுத்தை யடுத்தும் இரண்டு எழுத்துக்களையும் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்களையும் அடுத்தும் வல்லின மெய்களை ஊர்ந்து வரும். ஆறு: நெட்டெழுத்தையடுத்து வந்துள்ளது. இரண்டெழுத்தை அடுத்து விறகு பந்து வந்துள்ளது. குரங்கு : இரண்டுக்குமேற்பட்ட எழுத்துக்களை அடுத்து வந்துள்ளது. படு என்பது போல குற்றெழுத்தை யடுத்தும், செலவு, உருமு, நாலு என்பன போல் இடையின, மெல்லின மெய்களை ஊர்ந்தும் வரும் உகரம் ஓசை யிற் குறையாது. ஆகவே இவை முற்றுகரம் எனப் பட்டன. நுந்தை' என்ற சொல்லின் முதலில் வரும் உகரமும் குற்றிய லுகரமாகக் கருதப்பட்டது தொல்காப்பியர் காலத்தில். ஆய்தம்' என்பது நுட்ப வொலியை உடையது. மூன்று புள்ளி வடிவினையுடையது. அதனாலேயே