பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தொல்காப்பிய ஆராய்ச்சி தற்குரியது. அப்பழங்காலத்திலேயே தமிழ் மொழி அடைந்துள்ள ஒலி வரையறை மாண்பு உணர்ந்து ஒவ்வொரு தமிழரும் உவகைப் பெருமிதம் கொள்ளு தற்குரியார். எழுத்துக்களின் பிறப்பு: எழுத்துக்கள் (ஒலி வடிவங்கள்) எவ்வாறு பிறக் கின்றன?நாம் பேசுகின்றோம்; பேச்சொலி செல் கின்றது; சென்று எதிர் நிற்போர் செவியை எட்டு கின்றது. அவரும் பேசுகின்றார்; நம் செவியை எட்டுகின்றது. இவ்வாறு மொழி உயிருடன் வாழ் கின்றது.நாம் எவ்வாறு பேசுகின்றோம்? இதைப் பற்றிச் சிந்திப்பதுதான் பேச்சொலி தோன்றும் முறையை அறியச் செய்வதாகும். மேனாட்டு மொழி நூலறிஞர்கள் இதைப்பற்றிச் சிந்திக்கத் தொடங் கியது அண்மையில்தான்; சென்ற நூற்றாண்டி லிருந்துதான். நம் தமிழ் நாட்டில் கி.மு.ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே பேச்சொலி தோன்றும் முறைபற்றி அறியத் தொடங்கிவிட்டனர். அறிந்து எழுத்துக்கள் பிறக்கும் முறையைத் தெளிவாகக் கூறியுள்ளனர். எழுத்துக்கள் பிறக்கும் முறையை அறிந்தால் எழுத்துக்களை நன்கு ஒலிக்க முடியும்; திருத்தமாகப் பேசுதல் இயலும். திருத்தமாகப் பேசுதலே செந்தமிழ் வளர்ச்சிக்குத் துணைபுரியும். அதனால்தான் எழுத்துக்களைப்பற்றி அறிவித்த ஆசிரியர் தொல்காப்பியனார் அவை பிறக்கும் முறை பற்றியும் அறிவிக்கின்றார். எழுத்துக்கள் தோன்றுவதற்குக் காற்றும் உடலுறுப்புக்களும் இன்றியமையாதன. உந்தியி லிருந்து தோன்றும் காற்று நெஞ்சிலும் மிடற்றிலும் தலையிலும் பொருந்துகின்றது. மிடற்று (குரல்வளை)