பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து 65 வழியாக வாயினுள் செல்லுகிறது. மூக்கின் வழி யாகவும் வருகின்றது. நாவும் அண்ணமும் (மேல் வாய்) பல்லும், உதடும் பாங்குறப் பொருந்த எழுத் துக்கள் பிறக்கின்றன. இம்முறை எல்லா மொழி கட்கும் பொருந்தும். ஆங்கிலத்தில் கூறினாலும் ஆரியத்தில் கூறினாலும் பொருள் ஒன்றுதான். இம் முறையன்றி வேறு வழியாக மொழி தோன்றுதல் முடியாது. இப்பொது ஒற்றுமையைக்கொண்டு ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழி கடன் பெற்றது என்றல் பொருந்தாது. ஆசிரியர் தொல்காப்பியனார் கூறும் எழுத்துப் பிறப்புப் பற்றிய கருத்துக்கள் வடமொழி நூல்களுள் கூறப் படும் முறைகளோடு சிற்சில இடங்களில் ஒற்றுமை யுடையனவாய்த் தோன்றுதலால் தொல்காப்பியர் அவ்வடமொழி நூல்களைப் பின்பற்றியே தம் நூலை இயற்றியிருத்தல் வேண்டும் என்பது எட்டுணையும் பொருந்தாது. மேலை நாட்டு மொழியாராய்ச்சியாளர்கள் எழுத் துக்களின் பிறப்புப் பற்றிக் கூறும் கருத்துக்கள் Modern Tinguistics - Simeon Potter - Pages 14-15'; Language - Vendryes - Pages 20-21) தொல்காப்பியர் கூறும் கருத்துக்களோடு ஒற்றுமையுடையனவாய் இருக்கின் றன. அதனால் தொல்காப்பியர் மேனாட்டு ஆசிரியர்களைப் பின்பற்றியே கூறினார் என்று கூறல் பொருந்துமா? பொருந்தாதன்றோ? மொழிகள் பலவாக வேறுபட்டிருப்பினும் மொழிக்குரிய எழுத் தொலிகள் பிறக்குமிடங்கள் யாவர்க்கும் உரியனவே. உதடும், பல்லும், நாவும், அண்ணமும், குரல் வளையும், மூக்கும், தலையும், நெஞ்சும் அற்ற மக்களும் உளரோ? ஆதலின் தொல்காப்பியர் வட 5-1454