பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.6 தொல்காப்பிய ஆராய்ச்சி. மொழி நூலாசிரியரைப் பின்பற்றியே கூறினார் எனும் கருத்து பிழைபட்டது. உண்மைக்குப் புறம் பானது. அகத்தெழு வளியிசை அரில்தப நாடி அளபில் கோடல் அந்தணர் மறைத்தே" . என்னும் அடிகளில் அந்தணர் மறைத்தே' என்ப தற்குப் பார்ப்பாரது வேதத்து உளதே' என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறியுள்ளார். அந்தணர்.' என்பது வடமொழியாளர்களையும் 'மறை' என்பது வடமொழி வேதத்தையும் தான் குறிக்கும் என்று உரையாசிரியர்களில் சிலர் கருதியது இமயம் போன்ற பெருந்தவறாகும். தமிழ் மொழி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டோருள் சிலரைத் தவறான முனையில் திருப்பி விட்டதும் இத்தவறான உரையே யாம். தமிழ் நூல்களின் கால வரையறையைப் பிறழ உணரச் செய்ததும் இத்தவறேயாம். அந்தணர்' என்போர் தமிழரே; மறை என்பது தமிழ் மறையே. பின்னர் ஆரியர்கள் இந்நாட்டுக்கு வந்த பின்னர் அவருட் சிறந்தோரையும், அவர் உயர் வெனக் கருதிய நூலையும், அந்தணர் என்றும் மறை அழைத்துக் கொண்டனர். மேலை கிருத்துவர்கள் ஐயர்' என்றும் . . என்றும் நாட்டுக் சாஸ்திரி' யென்றும் அழைத்துக்கொண்டனர் அன்றோ? ஆகவே தொல்காப்பியத்தில் கூறப்படும் அந்தணர் தமிழர்க்குரியவர்; மறை தமிழர்க்குரியது எனத் தெளிதல் வேண்டும். அங்ஙனம் தெளியுங்கால் தொல்காப்பியர் கூறும் எழுத்துக்களின் பிறப்பியல் வடமொழி நூல்களிலிருந்து எடுக்கப்பட்டது அன்று என்றும் அறிய இயலும்.