பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தொல்காப்பிய ஆராய்ச்சி, 'த'வும், 'ந' வும் நாவின் நுனி விரிந்து மேல் வாய்ப் பல்லின் (முன்வரிசையில்) அடிப் பகுதியை ஒற்ற உண்டாகும். பல்லினம் (Dentals) என்று அழைப்பர். 'ற வும் ' ன ' வும் நாவின் நுனி மேனோக்கிச் சென்று மேல் வாயைத் தொட முயலப் பிறக்கும். இவ்வெழுத்துக்கள் மேலை நாட்டு மொழி களில் இல்லை. இவைகளையும் அண்ண இனத்தில் சேர்க்கலாம். ர, ழ' என்ற இரண்டும் நாவின் நுனி மேனோக்கிச் சென்று மேல் வாயைத் தடவப் பிறக்கும். ய, ர, ல, ழ, வ, ள எனும் இடை யினம் ஆறையும் அரை உயிர் என்பர் கால்டுவல். நாவின் நுனி மேல் வாய்ப் பல்லின் அடியைப் பொருந்தி ஒற்றுவதனால் 'ல' வும், தடவுவதனால் 'ள வும் பிறக்கும். உதடுகள் பொருந்துவதனால் 'ப, ம' என்ற இரண்டும் பிறக்கும். இதழினம் (Labials) என்பர். மேற்பல்லும் கீழுதடும் பொருந்த வகரம் பிறக்கும். இதழ்ப் பல்லினம் (Labio-dentals) என்பர். மிடற்றிலிருந்து உண்டாகும். காற்று அண்ணத்தைப் பொருந்த 'ய' பிறக்கும். ஆங்கில 'ஒய்' (y ) இவ்வாறு பிறப்பதாகவே கூறியுள்ளார். கிளீசன் என்பார். ( English 'y' is any mid or high palatal resonant functioning as a consonant. An Introdu- ction to Descriptive Linguistica-Page 198) மெல்லினம் ஆறையும் அதனுக்குரிய வல்லெழுத் துக்களோடு சேர்த்துக் கூறினாலும், மூக்கின் வளியால் உறுதி பெறத் தோன்றும்,

  • மெல்லெழுத் தாறும் பிறப்பின் ஆக்கம் சொல்லிய பள்ளி நிலையின வாயினும் மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும். 1

என்று கூறியுள்ளார். 1.தொல்.எழுத்து-ரு. 100.