பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதலின் தொல்காப்பியத்தை மக்களிடையே உலவச் செய்யும் நோக்கத்துடன் " தொல்காப்பிய ஆராய்ச்சி " யெனும் இந்நூலை வெளியிட முற்பட்டுள்ளோம். தொல்காப்பியத்தைப் புலவர்கள்தாம் படித்தற்குரியர் எனும் கருத்தை மாற்றிப் பொது மக்களும் படித்தற்குரியது என்று எண்ணுமாறு இவ்வாராய்ச்சி நூல் எழுதப்பட்டுள்ளது.இஞ் நூலால் தொல்காப்பியத்தின் சிறப்பையும் பயனையும் அறிந்து தொல்காப்பியத்தை விரிவாக ஆழ்ந்து கற்றல் வேண்டும் என்ற ஆர்வம் கற்போர் உள்ளத்தில் உண்டாகும். ஆதலின் தொல் காப்பியத்தைக் கற்பதற்கு வழிகாட்டும் முன்னுரையாக இவ் வாராய்ச்சி நூலைக் கொள்ளல் வேண்டும். இவ்வாராய்ச்சி நூலை ஆக்கித் தந்துள்ள பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களைத் தமிழுலகம் நன்கு அறியும். தொல் காப்பியத்தில் ஆழ்ந்த புலமையும் ஆராய்ச்சித் திறமையும் உடை யவர்கள். தொல்காப்பியத்தைப் பொது மக்களிடையே அறி முகப்படுத்தி அதனைத் தமிழராய்ப் பிறந்தார் யாவரும் தவறாது படிப்பதற்குத் தம்மாலியன்ற வரையில் உழைத்து வருகின்றார்கள். அவர்கள் மிக எளிய நடையில் இனிமை பொருந்த தூய தமிழில் குறைந்த தமிழ்க் கல்வியுடையோரும் விளங்கிக் கொள்ளுமாறு இதனை எழுதியுள்ளமை போற்றற் குரியது. இந்நூல் நல்ல முறையில் அச்சிடப்படுவதற்குப் பல வகை யாலும் துணை புரிந்தோர் பலர். அவருள் புலவர் திரு. நடராச னாரும், தமிழண்ணல் எம். ஏ., அவர்களும், அச்சுப்பிழை முதலி யன திருத்தி அழகுற வெளிவர அயராது உதவினர். அவர்கட்கும் ஏனையோருக்கும் நல்ல முறையில் அச்சிட்டுத் தந்த ரிப்பன் அச்சுக் கூடத்தாருக்கும் எம் உளமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.