பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'எழுத்து ' 69 மொழியாராய்ச்சியாளர் மெல்லின எழுத்துக்களைப் பிறப்பிடத்தால் மூக்கினம் என்று அழைப்பர் (Nazals). தொல்காப்பியர் கூறியுள்ள பிறப்பிடங்களுக்கு ஏற்ப மொழிநூலார் இட்டுள்ள பெயர்கள் அமைக் துள்ளமை தொல்காப்பியரின் மொழி நூல் புலமையை வெளிப்படுத்துகின்றது. இற்றை நாள் மொழி நூலார், எழுத்துக்களின் ஒலிப்பு முறையை ஆராய்ந்து பேச்சியல் ஒலிப்பு முறை (Articulatory Phonetics ) என்றும். இசை இயல் ஒலிப்பு முறை Acoustic Phonetics) என்றும் இருவகைப்படுத்தி யுள்ளனர். தெல்காப்பியரும் இவ்விரு வகை ஒலிப்பு முறைகளையும் ஆராய்ந்தறிந்து பேச்சியல் ஒலிப்பு முறையைப் பிறப்பியலில் கூறி இசையியல் ஒலிப்பு முறையை இசை நூலில் காண்க என்று கூறியுள்ளார். அவர் கூறியுள்ள முறையை நோக் குங்கால், இவ்வகை ஆராய்ச்சி தொல்காப்பியர்க்கு முன்பே தமிழகத்தில் இருந்துள்ளது என்று அறியலாம். புணரியல்: மொழி யென்பது. உள்ளத்தெழும் எண்ணங் களைப் பிறர்க்கு அறிவித்தற்கென உருவாக்கப்பட்ட தாகும். மொழி சொற்களால் ஆகியது. சொல் ஒலி களால் ஆகியது. எண்ணங்களைப் பிறர்க்கு வெளிப் படுத்த முயலுங்கால் நாவினின்றும் சொற்கள் வெளிப்படுகின்றன. விரைவு, உணர்ச்சி, முயற்சிச் சுருக்கம். எளிமை, இனிமை, மடிமை முதலிய காரணங்களால் சொல்லொலிகள் மாறுபடுகின்றன. 1. அனபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய கரம்பின் மறைய என்மனார் புலவர்.' (தொல். எழுத்து-கு. 33.)