பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தொல்காப்பிய ஆராய்ச்சி உரையாடுங்கால் சொல்லோடு சொல் தொடர்ந்து செல்கின்றன. சொல்லோடு சொல் சேரும்போது தான் மேற்கூறிய ஒலி மாற்றங்கள் மிகுதியாக உண்டாகின்றன. இவைகளைப் பற்றி ஆறு இயல் களில் தெளிவுறக் கூறியுள்ளார், ஆசிரியர் தொல் காப்பியர். சொற்கள் ஒன்றோடொன்று சேருங்கால் உண்டாகும் மாறுதல்களைக் கூறுவதனால் பொது வாகப் புணரியல் என்று பெயரிட்டார். இவ்வாறு விரிவாக எம்மொழியினும் சொற் புணர்ச்சியால் உண்டாகும் ஒலி மாற்றங்கள் கூறப்படவில்லை என்பது தேற்றம். சொற்கள் ஒன்றோடொன்று இணைந்து புணருங் கால் இனிமையும் எளிமையும் பொருந்த அமைதலைக் குறிக்கோளாகக் கொண்டு சொற்றொடர்கள் அமைத் தனர் தமிழ் முன்னோர். ஆகவே இவ்வளவு விரிவாகத் தொல்காப்பியரும் கூறியுள்ளார். மேலைநாட்டு மொழி ஆராய்ச்சியாளர் மொழி களில் ஏற்படும் ஒலி மாற்றங்களை ஏறத்தாழப் பத்து வகைகட்குள் அடக்கிவிட்டனர் என்று கூறலாம். அவையாவன:- மண் + 1. மெய்யொன்றாதல் (Assimilation) : குடம் = மட்குடம். வருமொழி முதலில் உள்ள 'கு என்ற வல்லெழுத்திற் கேற்ப நிலைமொழி யிறுதி மெல்லின 'ண்' வல்லின 'ட்' ஆக மாறியுள்ளது. 2. மெய்ம் மிகுதல் (Insertion) நும் + ஐ = நும்மை. நுமை என்பது நும்மை எனத் தோன்றியுள்ளது. 3. மொழி முதல் தோன்றல் (Prosthesis) ராமன்; இராமன். 4. மொழி இடை தோன்றல் (Epanthesis) ஆய் தல்: ஆராய்தல்.