பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து . 73 சொற்கள் இலக்கண முறையிலன்றி மாறியும் நிற்கும். 'இல்முன்' என்பது 'முன்றில் என்றும், நகர்ப் புறம் என்பது புறநகர்' என்றும் வருகின்றன. இவை வழக்காற்றில் பன்னெடுங் காலமாகப் பயின்று வந்துள்ளமையால் இலக்கண நெறியில் பொருந்தியனவாகவே கருதுதல் வேண்டும். மரூஉ மொழிகள் என்று அழைப்பர். சொற்கள் சேருங்கால் வேற்றுமைப் பொருளுடையனவா? அல் வழிப் பொருளுடையனவா? என்று அறிந்து கொள்ளல் வேண்டும். வேற்றுமைப் பொருளுடை யனவாய் இருப்பின் வேற்றுமையுருபுகள் இடையே வந்து சேரும். முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை. இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை முடிய ஐ, ஒடு, கு, இன், அது, கண் எனப்படும் வேற்றுமை உருபுகள் பெயர்களுடன் வந்து சேரும். தமிழில் வேற்றுமையுருபுகள் பெயர்க்குப் பின்தான் வருமே யன்றிப் பெயர்க்கு முன் வாராது. பெயர்களோடு வேற்றுமையுருபுகள் சேருங்கால், தனி எழுத்தோ சாரியையோ ஓசை இனிமைக்காகச் சில இடங்களில் வரும். சொற்களின் தொடர்ச்சிக்கண் உயிருக்கு முன்னால், உயிரும் மெய்யும், மெய்க்கு முன்னால் மெய்யும் உயிரும் வரும். அவ்வாறு வருங்கால் உயிருக்கு முன் உயிர் வந்தால் இரண்டையும் ஒன்று சேர்க்க இடையில் சில மெய்கள் வரும். இம்மெய் களுக்கு உடம்படுமெய்கள் என்று பெயர். இரண்டு சொற்களை இன்னோசை பட ஒன்று படுத்துவதால் இப்பெயர் பெற்றன. மிதி+அடி - மிதியடி. இங்கு ய் வந்துள்ளது. திரு+அடி- திருவடி. இங்கு வ் வந்துள்ளது. செய்கு + அர்செய்குநர். இங்கு 1. = =