பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தொல்காப்பிய ஆராய்ச்சி ந் வந்துள்ளது.கட்டி+அ = கட்டின. இங்கு ன் வந்துள்ளது. ந் பிற்கால இலக்கண நூலார் யகரம் வகரம் இரண்டுமே உடம்படு மெய்களாக வரும் என்றும் யகரம் இ, ஈ, ஐ க்குப் பின்னாலும், வகரம் ஏனை உயிர் கட்குப் பின்னாலும், 'ஏ க்குப் பின்னால் இவ்விரண்டு மெய்களும் வரும் என்றும் கூறிச் சென்றனர். அல்லது 'ன்' தோன்றுதலை எழுத்துப் பேறு என்றும் சாரியை என்றும் குறிப்பிட்டனர். ஆசிரியர் தொல்காப்பியர் இவ்வாறெல்லாம் வகை செய்யாமல் "எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்' என்று விதித்துள்ளார். . நிலைமொழி இறுதியினும் வருமொழி முதலினும் உயிர் எழுத்துக்கள் அமைந்து சொற்றொடர் ஆகுங் கால் இன்னோசையின்றி விட்டிசைக்க நேரிடும். வழி அன்று என்பதனையும் உடம்படு மெய் பெற்ற 'வழி யன்று என்பதனையும் ஒலித்துப் பார்த்து வேறுபாடு அறியலாம். இரண்டு உயிர்கள் சேர்ந்து வருங்கால் எளிதாக ஒலிக்க முடியாத இடர்ப்பாட்டைத் தவிர்க்கவே மெய்யெழுத்துக்களைக் கூட்டி ஒலிக்கும் முறையைத் தமிழ் நூலார் மேற் கொண்டனர். தொடக்க காலத்தில் பல மெய்களைப் பயன்படுத்தி யிருத்தல் கூடும். காலப் போக்கில் 'ய்' 'வ்' என்ற இரண்டுமே நிலைத்து விட்டன. இவ்விரண்டு மெய்களும் இன்னின்ன இடங்களுக் சூரியன் என வரன் முறையும் ஏற்பட்டு விட்டது. இத்தகு வரன் முறை, மொழி வளர்ச்சிப் பண் பாட்டின் பயனாகவே தோன்றியுள்ளது' என்று அறிஞர் கால்டுவெல் குறித்துள்ளார். (This use of 'y' in one conjunction of vowels, and of 'y' in another is