பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 78 . தொல்காப்பிய ஆராய்ச்சி வரும். இரண்டெழுத்தாலான சொற்களில் நகு, புகு. படு போல் வனவற்றுள் 'உ'வந்திருப்பினும் குற்றிய லுகரம் எனப்படாது. இரண்டெழுத்தால் ஆன சொல்லாயிருப்பின் முதலெழுத்து நெடிலாயிருந்தால் அதனோடு வந்துள்ள உகரம் குற்றிய லுகரமாகும். நாகுஆடு' என்பனவற்றுள் வந்துள்ள உகரம் குற்றிய லுகரம் எனப்படும். இவ்வாறு நெட்டெ ழுத்தோடுசேர்ந்து வந்துள்ள குற்றியலுகரம் நெடிற் றொடர் குற்றிய லுகரம் எனப்படும். தொல்காப்பியர் ஈரெழுத்தொருமொழித் தொடர் என்பர். ஏனைய. உயிர்த்தொடர், இடைத் தொடர், ஆய்தத் தொடர் வன்றொடர், மென்றொடர் எனப்படும். இவை குற்றிய லுகரத்திற்கு அயலே வந்துள்ள எழுத்தால் பெயர் பெற்றுள்ளன. விறகு: உயிர்த்தொடர். 'கு'வுக்கு அடுத்த எழுத்து உயிர் மெய்யாக இருப்பினும் அதையும் பிரிப்பின் (ற்+அ) உயிர் எழுத்தே அயலிலிருப்பதை அறியலாம். ஆதலின் உயிர்த் தொடரில் குற்றிய லுகரத்துக்கு அயலெழுத்து உயிர் மெய்யாகவே இருக்கும். சார்பு: இடைத் தொடர், 'பு'வுக்கு அடுத்த எழுத்து இடையின எழுத்தாம் 'ர்' ஆகும். ஆதலின் இடைத் தொடர். எஃகு: ஆய்தத்தொடர். 'கு'வுக்கு அடுத்திருப் பது ஆய்த எழுத்து. ஆதலின் ஆய்தத்தொடர். கொக்கு: 'கு'வுக்கு அடுத்த எழுத்து வல்லி னம் 'க்' ஆதலின் வன்றொடர். குன்று று'வுக்கு அடுத்த எழுத்து மெல்லி னம் 'ன்' ஆகவே மென்றொடர்.