பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II சொல் சொல்லே மொழியின் தோற்றமாகும்."ஆதியில் இருந்தது சொல்; அச்சொல் கடவுளோடு இருந்தது; அச்சொல்லே கடவுள்" என யோவான் (St.John) என்பவர் கூறியுள்ளார். நம் கருத்தை வெளிப் படுத்தும் கருவியாம் சொல் இன்றெனின் உலகமே ன்றெனக் கூறிவிடலாம். நாம் நினைக்கத் தொடங்கும்போதே சொற்றொடர்களில்தான் நினைக் கின்றோம். (We think in Sentences - Language by Vendryes - Page 73) தொல்காப்பியர் இதனை உணர்ந்தே சொற்படலத்தின் முதலியலாகக் கிளவி யாக்கம்' என்பதைக் கொண்டு சொற்றொடர் ஆகும் மரபுகளை ஆராய்ந்துள்ளார். சொல் உருவாக்கப்பட்டது பொருளை அறிவிக் கவே. எவ்வகையானும் பொருளை அறிவியாத நிலையில் சொல் தோன்றாது. ஆதலின் தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே"