பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தொல்காப்பிய ஆராய்ச்சி கூறியுள்ளது. திணை பால்களை வினைச் சொல்லின் ஈற்றெழுத்தால் அறியலாம். 'ன்' ஆண்பாலையும், ள் பெண்பாலையும், ' ர், ப, மார்' என்பன பலர் பாலையும், து, று, டு என்பன ஒன்றன் பாலையும், 'அ, ஆ, வ' என்பன பலவின் பாலையும் அறிவிக்கும். இவ்வாறு ஒழுங்குறத் திணை பால் அறிவிக்கும் முறையை நம் தமிழ் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே பெற்றுள்ளது. பெயர்கள் மூன்று வகையாகப் பிரிக்கப் பட்டுள்ளன. உயர்திணைக்குரியன ; அஃறிணைக் குரியன; இருதிணைக்குரியன். இரு திணைக்கும் உரிய பெயரை விரவுப் பெயர் என்பர். சாத்தன் வந்தான் என்பது உயர்திணை ஆண்பால்; சாத்தன் வந்தது என்பது அஃறிணை ஒன்றன்பால். அஃறிணைக்கும் பெயரிட்டு அழைக்கும் வழக்கம் பண்டைத் தமிழகத்தில் இருந்தது என் பதை இவ்விரவுப் பெயர்ப் பகுப்பால் அறியலாகும். யான் யாம் நாம் என்னும் தன்மைப் பெயர்களை உயர்திணைக்குரியன என்று கூறிய தொல்காப்பியர் நீ, நீயிர் என்னும் முன்னிலைப் பெயர்களை விரவுத் திணைக்குரியன என்று கூறியுள்ளார். அஃறிணைக் குரியன யான், யாம் எனக் கூறிக்கொள்ளும் ஆற்றல் அற்றன. ஆகவே யான், யாம் என்பனவற்றை அவை களுக்கு உரியன அல்ல என்று விளக்கியுள்ளார். ஆனால் அவைகளை நோக்கி நீ, நீயிர் என்று விளிக்க லாம். அவ்வாறு விளிப்பதை அவை அறிய முடியாது போயினும், விளித்துக் கூறுவது புலவர்கள் மரபு. ஆகவே நீ, நீயிர் எனும் முன்னிலைப் பெயர்களை இரு திணைக்கும் உரியனவாக்கியுள்ளார்.