பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 87 தன்மைப் பெயர்களும் முன்னிலைப் பெயர்களும் ஆண் பெண் எனும் இருபால்களுக்கும் பொது வானவைகளே. சில மொழிகளில் உள்ளவாறு ஆணுக்கு வேறு; பெண்ணுக்கு வேறு கொள்ள வில்லை. அஃறிணைப் பெயர் பன்மை எண்ணைச் சுட்டுகின்ற போது 'கள்' விகுதி பெற்றுவரும்.

  • " கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி யுடைய பலவறி சொற்கே.

இக் கள் விகுதி தொல்காப்பியர் காலத்தில் அஃறி ணைப் பன்மையை அறிவிப்பதற்கு மட்டும் பயன் பட்டு வந்துள்ளது. பின்னர் உயர்திணைப் பலர்பாலை அறிவித்தற்குப் பயன்பட்டது: தமர்கள், அரசர்கள். அவர்கள். பின்னர் பலர்பால் வினையிலும் பயன் படுத்தப்பட்டது: அவர்கள் சொன்னார்கள். பலர் பால் வினையைப் பெயராக ஆக்கிய போது கள் விகுதி சேர்த்தே கூறப்பட்டது. ஆகவே வினையா லணையும் பெயரிலும் இணைந்து நின்றது. இன்று ' கள்' விகுதி, அஃறிணைப் பன்மையோடு, உயர் திணைப் பன்மையையும், உயர் சொற் கிளவியை (மரியாதைப் பன்மை)யும் அறிவிக்கின்றது. அஃறிணை இயற்பெயர், கள்' விகுதியைப் பொருந்தாமல், வினையாலும் பன்மையை உணர்த் தின : குதிரை வந்தன.

  • தெரிநிலை யுடைய அஃறிணை இயற்பெயர் ஒருமையும் பன்மையும் விளையொடு வரினே '

என்று தொல்காப்பியர் கூறியுள்ளமையின் அவர் காலத்திலேயே இம்முறை துள்ளது என்று அறியலாம். வழக்கத்தில் இருந்