பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தொல்காப்பிய ஆராய்ச்சி முதல் வேற்றுமையைப் பெயர் வேற்றுமை என்றும் எழுவாய் வேற்றுமை என்றும் அழைத் துள்ளனர். ஏனை வேற்றுமைகளை அவ்வவற்றின் உருபுகளாலேயே அழைத்தனர். அவை, ஐ வேற்றுமை, ஓடு வேற்றுமை, கு வேற்றுமை, இன் வேற்றுமை, அது வேற்றுமை, கண் வேற்றுமை எனப்பட்டன. " . தொல்காப்பியர் இரண்டாகுவதே, ஐயெனப் பெயரிய வேற்றுமைக்கிளவி ", "மூன்றாகுவதே, ஓடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி" எனக் கூறிச் செல்கின்றார். பவணந்தியார் தம் நன்னூலில் பெயரே ஐ, ஆல், கு, இன், அது, கண், விளி யென் றாகும் அவற்றின் பெயர் முறை" என்று கூறி விட்டு, இரண்டாவதன் உருபு" மூன்றாவதன் உருபு', 'நான்காவதன் உருபு' என்று கூறிச் செல் கின்றார். இதனைக் கண்ணுற்ற கால்டுவல், திராவிட இலக்கண ஆசிரியர்கள் தம் மொழி பெயர்ச் சொற் களின் வேற்றுமைகளைச் சமசுகிருத முறையினைப் பின்பற்றி வரிசைப்படுத்தி யிருப்பதாகக் கருதி விட்டார். அறிஞர் சுப்பிரமணிய சாத்திரியார், பாணினி யையும் அவர்க்கு முன்புள்ளவர்களையும் பின்பற்றித் தொல்காப்பியர், தமிழ் வேற்றுமைகட்கு இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை எனப் பெயரிட் டார் என்று கூறுகின்றார் (History of grammatical" Theories in Tamil - Page 109). தொல்காப்பியர் இரண் டாகுவதே, மூன்றாகுவதே என வரிசைப் படுத்திக் கூறியுள்ளாரே யன்றி இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை எனக் கூறினாரிலர். அன்றியும், ஐ எனப் பெயரிய வேற்றுமை, ஒடுவெனப் பெயரிய