பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 91 வேற்றுமை என்றும் குறிப்பிட்டுள்ளமையை நோக் குதல் வேண்டும். பாணினி தொல்காப்பியர்க்குக் காலத்தால் பிற்பட்டவர் என்பதனையும் அறிதல் வேண்டும். ஆகவே கால்டுவல் அவர்களும் சாத்திரி யார் அவர்களும் கருதுவது' போன்று வடமொழி யைப் பின்பற்றித் தமிழ் இலக்கண நூலார் தமிழ் வேற்றுமைகளை வரிசைப் படுத்தினார் என்றலோ. தொல்காப்பியர் வேற்றுமைகட்குப் பெயரிட்டனர் என்றலோ பொருந்தாது. வேற்றுமைகட்குப் பெயரிடுதல் இரண்டாவது மூன்றாவது என வரிசை முறையிலும், செயப்படு பொருள் வேற்றுமை, கருவி வேற்றுமை எனப் பொருள் அடிப்படையிலும், ஐ வேற்றுமை ஒடு வேற் றுமை என உருபுகளை ஒட்டியும் நிகழ்ந்துள்ளது. வரிசை முறைப் பெயர் வடமொழியிலும், பொருள் அடிப்படைப் பெயர் ஆங்கிலம் முதலிய மேலை நாட்டு மொழிகளிலும், உருபை ஒட்டிய பெயர் பழந்தமிழி லும் காணுதல் கூடும். வரிசை முறையில் பெயரிடுதல் மொழி வளர்ச்சியின் தொடக்க காலத்தில் இயலாது. உருபுகளைக் கொண்டு சொற்றொடர் அமைத்துக் கருத்தினைப் புலப்படுத்தும் முறை வளர்ச்சியுற்று நிலைபெற்ற பின்னரே இயலும். தமிழில் அவ்வாறு தான் நிகழ்ந்துள்ளது. பொருள் வகையில் வேற்றுமைகளைக் கூறவேண்டு மென்றால் வேற்று மைகள் பல்கிப் பெருகும். ஒடுவேற்றுமையைக் கருவி வேற்றுமை யென்றும், வினைமுதல் வேற்றுமை யென்றும், உடனிகழ்ச்சி வேற்றுமை யென்றும் மூன்றாகக் கணக்கிடல் வேண்டும். கால்டுவல் அவ்வாறுதான் கருதுகின்றார். திராவிட மொழி களில் உடனிகழ்வுப் பொருள் இன்றியமையாச் சிறப்பு வாய்ந்த ஓரிடத்தைப் பெற்றுள்ளதாகவும்,