பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 93 வேற்றுமைகளை அழைத்தல் வேற்றுமைகள் பல்கிப் பெருகாமல் இருப்பதற்குத் துணை செய்யும். இன்று வேற்றுமை உருபுகளை விடுத்து எண் வரிசையில் பெயரிட்டு எட்டு வேற்றுமைகட்குள் அடக்கி விட்டனர். தொல்காப்பியர் காட்டிய நெறி யைப் பவணந்தியார் மேற்கொள்ளாததன் விளைவே இது. இனி தமிழிற்குள்ள பிறிதொரு இயல்பாவது வேற்றுமை யுருபு இன்றியும் வேற்றுமைப் பொருளை உணர்த்தலாகும். 'நிலம் கடந்தான்,' என்பதில் 'ஐ' உருபு மறைந்து நிற்கின்றது. நிலத்தைக் கடந்தான் என்று கூறுதலின்றி நிலம் கடந்தான்' என்று கூறு வதை வேற்றுமைத் தொகை என்பர். . வேற்றுமை உருபு பெயர்க்கிறுதியில் வெளிப் பட்டும் மறைந்தும் பொருளைத் தருங்கால் சாரியை பெற்றும் பெறாதும் வரும். நிலத்தைக் கடந்தான் எனற்பாலது நிலத்தினைக் கடந்தான்' எனவரும், நிலத்தினை' என்பதில் 'இன்' சாரியை வந்துள்ளது. இன்னோசை பயத்தற்கு இச்சாரியை வந்துள்ளது. நிலம் கடந்தான்' என்பது 'நிலத்தைக் கடந்தான். என வருங்கால் 'அத்து' சாரியையாக வந்துள்ளது. இச்சாரியை தொடர் அமைப்புக்குத் துணையாக வந்துள்ளது. சில பெயர்கள் வேற்றுமை யுருபுகளை ஏற்குங்கால் சாரியைகளைப் பெற்றுத்தான் ஏற்கும். அங்ஙனம் வரும் சாரியைகளைப் பற்றியும், அவை ஏற்கும் முறைகளைப் பற்றியும் எழுத்துப் படலத்தில் உருபியலில் விரிவாகக் கூறியுள்ளார். ஒவ்வொரு வேற்றுமைக்கும் இன்னின்ன பொருள் என வரை யறுத்துக் கூறியுள்ளார்.