பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தொல்காப்பிய ஆராய்ச்சி எழுவாய் வேற்றுமை (முதல் வேற்றுமை) பெயர் தோன்றும் நிலை என்றார். அந்நிலையாவது உருபும். எட்டாம் வேற்றுமை எனப்படும் விளியும் ஏலாது வருவதாம். இரண்டாவதாகிய 'ஐ' வேற்றுமை வினையும் வினைக் குறிப்பும் ஆகிய அவ்விரண்டு முதற்கண்ணும் தோன்றுமவை பொருளாக வரும். குடத்தை வனைந்தான்': வனைந்தான் என்பது தெரிநிலை வினை. குழையை உடையான்: உடையான் என்பது குறிப்பு வினை. காலத்தை வெளிப்படை யாக உணர்த்துவதனைத் தெரிநிலை என்றும், குறிப் பாக உணர்த்துவதனைக் குறிப்பு வினை என்றும் அழைப்பர். இவ்வாறு வருவன இருபத்தெட்டுப் பொருள்களை அடிப்படையாகக் கொண்டு வரும் என்றார். வினையும் வினைக் குறிப்பும் செயப்படு பொருள் கொண்டு வருவனவே- இரண்டாம் வேற்று மையாக இருத்தலின் இதனைச் செயப்படு பொருள் வேற்றுமை என்று அழைப்பதும் மரபு. மூன்றாவதாகிய ஒடு' வேற்றுமை வினை முதலும் கருவியும் ஆகிய இரண்டு முதலையும் பொருளாக உடையது. வினைமுதல் என்பது கருவி முதலாயின காரணங் களைத் தொழிற்படுத்துவது. கருவி என்பது வினைமுதல் தொழிற் பயனைச் செயப்படு பொருட்கண் செலுத்துவது. ஒன்று நிகழ் வதற்குக் கருவியாக இருக்கும் நிலையை உணர்த்து வதே மூன்றாம் வேற்றுமையாகும். மாந்தர் கருவியாக இருப்பின் அவரைக் கருத்தா என்றும், மாந்தரல்லாப்