பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 95 பிற கருவியாக இருப்பின், கருவியென்றும் பின்னர் வகைப்படுத்தினர். முருகனான் கொல்லப்பட்டான் என்பதில் முருகன் கருவியாக இருப்பினும் 'கருத்தா' என்று கூறப்பட்டது; வாளால் வெட்டினான் என்ப தில் வாள் கருவியாக இருப்பது வெளிப்படை. ஒன்று நிகழ்வதற்குத் துணையாய் நிற்கும் கருவி உயர்திணை யாயின் கருத்தா என்றும், அஃறிணையாயின் கருவி என்றும் கூறும் வழக்கம் பின்னர் ஏற்பட்டு விட்டது. தொல்காப்பியர் காலத்திலேயே இவ்வேறு பாடு உணரப்பட்டு விட்டதால் அவரே வினைமுதல் (கருத்தா) என்றும் கருவி என்றும் இரண்டன் அடிப் படையில் தோன்றும் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு வருவதன் வகைகளை 'அதனின் இயறல் முதலாக விரித்துரைத்தார். ஆசிரியனோடு மாணவர் வந்தார்' என்பது அத னோடு இயைந்த ஒரு வினைக்கிளவியாகும்; மாணவர் வருவதற்கு ஆசிரியன் கருவியாக அமைந்துள்ளான். ஆகவே அவர் வருகைக்கு ஆசிரியன் வினைமுதல் ஆனான். பின்னர் வருகைத்தொழில் இரு சாரார்க்கும் ஒரு சேர நிகழ்வதனால் இதனை உடனிகழ்ச்சிப் பொருள் என்றனர். பவணந்தியார் மூன்றாம் வேற் றுமைப் பொருள் கருவி, கருத்தா,உடனிகழ்வு எனக் கூறினார். கால்டுவல் அவர்கள் "இவ்வாறு மூன்று வகைப் பொருள்களை ஒரு வேற்றுமைக்கண் அடக்கு தல் பொருந்தாது; இவ்வாறு தமிழிலக்கண நூலார் செய்தது வடமொழியைப் பின்பற்றியே யாகும்," என்று கூறியுள்ளார். மூன்றாம் வேற்றுமை உருபுகளும் ஒடு, ஓடு ஆன்,ஆல் எனப் பல்கிவிட்டன. ஓடுவிலிருந்து ஓடு வும், ஆனிலிருந்து ஆலும் தோன்றிவிட்டன. ஆசிரிய