பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தொல்காப்பிய ஆராய்ச்சி னொடு எனற்பாலது ஆசிரியனோடு என எளிதாக வரும். 'சாத்தனான் முடியும்' என்பதைச் 'சாத்தனால் முடியும் எனவும் பிரித்து விட்டனர். தொல்காப்பியர் 'ஒடு' உருபைக் கூறினார். ஆன் உருபை பயன்படுத்தி யுள்ளார். ஆகவே மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபாக முதலில் தோன்றியது. 'ஓடு'வே எனல் அறியலாம். 'ஆன்' உருபு பின்னர் தோன்றி ஒடு வின் பொருளிலேயே வழங்கியிருத்தல் வேண்டும் என அறியலாம். நான்காவதாகிய 'கு' வேற்றுமையின் பொருள், எப்பொருளாயினும் கொள்ளும் அது என்றார். " பிற பொருளும் உளவாயினும் கோடற் பொருள் சிறந்தமையின் எப்பொருளாயினும் கொள் ளும் என்றார். என்று கூறினார் சேனாவரையர். ஆசிரியர் தொல்காப்பியர் அதனை விரித்துரைக் குங்கால், அதற்கு வினை உடைமையின், அதற்கு உடம்படுதலின் அதற்குப்படு பொருளின் அதுவாகு கிளவியின் அதற்கு யாப்பு உடைமையின் அதன் பொருட்டாதலின் நட்பின் பகையின் காதலின் சிறப்பின் என்று அப்பொருள் கிளவியும் அதன்பால என்மனார் என்று கூறினார். " " பவணந்தியார் நான்காவதற்கு உருபு ஆகும் குவ்வே, கொடை பகை நேர்ச்சி தகவு அதுவாதல் பொருட்டு முறை ஆதியின் இதற்கு இது எனல் பொருளே" என்று தொல்காப்பியர் கூறியனவற் றைத் தொகுத்துக் கூறினார். எப்பொருளாயினும் கொள்ளும் அதுவே" என்றதை, ' இதற்கு இது எனல்' என்று வேறு சொற்களால் கூறியுள்ளார்.