பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் நான்காம் வேற்றுமையின் உருபாகிய 97. கு பிற திராவிட மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் அயல் நாட்டு மொழிகளிலும் சிறிது வடிவ வேறு பாட்டுடன் பயிலக் காணலாம். கோ.கௌன் இந்தி - மொழியில் தாத்தாரி ஐரிஷ் சர்குடின் ஒஸ்டியாக் கெ க க க சித்திய மொழிக் கல்வெட்டில் இக்கி, இக்க. தமிழில் பேச்சு வழக்குகளில் கு. கோ, கெ.கி. எனத் திரிந்து வழங்குவதைக் காணலாம். உனக்கோ கொடுத்தான்; அவனுக்கிக் கொடு; எனக்கே கொடுத்தான் முதலியனவற்றை நோக்குக. நான்காம் வேற்றுமை உருபை பிறமொழிகட்கு அளித்த பெருமை தமிழுக்கே உண்டு. . ஐந்தாவதாகிய இன்' வேற்றுமை, இதனின் இற்று இது' என்னும் பொருளையுடையது. இப்பொருளின் இத்தன்மைத்து இப்பொருள் என்பது வண்ணம் முதலாகப் பற்று விடுதலீறாகச் சொல்லப்பட்டனவும் (நூற்பா 78), பிறவும் ஐந்தாம் வேற்றுமைத் திறத்தன என விரித்துக் கூறியிருப் பதை நோக்குதல் வேண்டும். அவைகளைத் தொகுத்து நீக்கல், ஒப்பு, எல்லை, ஏது எனும் பொருள்களில் வரும் ஐந்தாம் வேற்றுமை என்றார் பவணந்தியார். உருபுகள் இன், இல் என்பன என்றார். இன்' என்பதனைப் பிரித்து எழுதுங்கால் 'இல்' என எழுதி விட்டனர். இதனிற் றண்ணிது இது; இதனின் 7-1454