பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தொல்காப்பிய ஆராய்ச்சி தண்ணிது' என்றோ, இதனில் தண்ணிது என்றோ பிரிக்கலாம். ஆதலின் 'இன்' உருபிலிருந்தே இல்' உருபு தோன்றியுள்ளது என அறியலாம். . ஆறாவதாகிய அது வேற்றுமை, கிழமைப் பொருளை - உரிமைப் பொருளை உடையது. தற்கிழ மையும் பிறிதின் கிழமையும் என இருவகைப்படும். தன்னோடு பிரிக்க முடியாத தொடர்பினையுடையதைத் தற்கிழமை என்றும், பிரிக்கக்கூடிய தொடர்புடைய தைப் பிறிதின் கிழமை என்றும் கூறுப. இக்கிழமைப் பொருள் இயற்கை முதலாகப் பல்வேறு வகைப் படும் (நூற்பா 80). . நன்னூலார் ஆறாம் வேற்றுமை ஒருமைக்கு அதும், ஆதும் என்றும், பன்மைக்கு அ என்றும் கூறியுள்ளார். வடமொழியில் உள்ளதுபோல் ஒருமை எண்ணுக்கு ஒரு வகையான உருபுகளும் பன்மை எண்ணுக்கு இன்னொரு வகையான உருபு களும் தமிழிலும் உண்டு போலும் என்று கருது மாறு நன்னூலார் கூறியிருப்பினும் உண்மை நிலை அவ்வாறு அன்று. ஒருமை பன்மை என்பது வேற்றுமை உருபை ஏற்கும் பெயர்களைக் குறிப்பது அன்று. தழுவும் பெயர்களைக் குறிப்பதாகும். தனது கை, தனாது கை, தன கைகள் என்ற எடுத்துக் காட்டுகளை நோக்குக. தழுவும் பெயர் உயர்திணை யாய் இருப்பின் 'அது' முதலிய உருபுகள் வாரா என்றும் உடைய எனும் சொல் உருபு வரும் என்றும் நன்னூல் உரையாசிரியர்கள் கூறியுள்ளனர். " அஃறிணை ஒருமை பன்மைகட்கு இயைந்த உருபு இங்ஙனம் கூறவே, உயர்திணை ஒருமை பன்மை யாகிய கிழமைப் பொருட்கு இவ்வுருபுகள் ஏலா என்பது பெற்றாம். அவை வருங்கால் அவனுடைய