பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 சொல்லதிகாரப் 535-51 "பலவயி னானு மெண்ணுத்திணை விரவுப்பெயர் அஃறிணை முடியின செய்யு ளுள்ளே. 5 J 5.3 F-52 "வினைவேறு படுஉம் பலபொரு ளொருசொல் வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல்லென்(று) ஆயிரு பெரிதிய பலபொரு ளொருசொல். 5. இச் சூத்திரத்தின் இரண்டாவது அடியின் முதற்சீர் அஃறிணை என்பதற்கேற்ப முதலடி முதற்சீர் பல்வயின் என்று இருத்தல் வேண்டும். இம் முதலடியில் செய்யுளோசை சிறக்கவில்லை. இலக்கண விளக்கவாசிரியர் 'தினைவிர வெண்ணுப்பெயரென்று நூற்பாச் செய்துள்ளமையின். இதன் முதலடியை பல்வயி னானுந் திணைவிர வெண்ணுப்பெயர் என்று மாற்றியமைக்கலாம் போலும் இது ஊகமே. கே.எம்.வி. 'எ.ன் இச் சூத்திரத்திற்கு உரையில்லை. இலக்கமுமில்லை. மேலவற்றுள் வினைவேறுபஉேம் பலபொருளொருசொல் என்னுஞ் சூத்திரமுமில்லை. அதற்குட் பதவுரை எழுதியிருக்கிறது' என்று இந்நூற்பாவின் கீழ் எழுதப்பட்டுள்ளது புலிகை ஏட்டில். (பாகினி , 'ஆாது அச்சுப்புத்தகத்திற்கண்ட உரை கீழ்வருமாறு காண்க:- இச்சூத்திரம் என்துதலிற்றோ வெனின் பலபொருள் ஒரு சொல்லின் வகைமை உணர்த்துதல் நுதலிற்று. "வினையான் வேறுபடும் பலபொருள் ஒரு சொல்லும். வினையான் வேறுபடாத பலபொருள் ஒரு சொல்லுமென அவ்விரண்டு வகைப்படும் பலபொருள் ஒருசொல் என்றவாறு இவ்வுரை துறைசை திருவாவடுதுறை ஏட்டிலும் உள்ளது. மற்றொரு பிரதியிற்கண்ட உரை. இச் சூத்திரம் என் துதலிற்றோவெனின் ஒரு சொல்லான் வரும் பல்பொருள் வகை கூறுதல் நுதலிற்று. 'பல்பொருள் குறிக்கும் ஒரு சொல் வினைவேறுபடுகின்ற பல்பொருள் ஒரு சொல்லென வினைவேறுபடா.அப் பல்பொருள் ஒரு சொல்லென இரு வகைப்படும் என்றவாறு பலபொருள் குறிக்கும் ஒரு சொல்லினையும் பிறவகைப்படுத்திப் பகுத்தல் ஒல்லுமெனினும் வேறுபடுத்திக் கோடற்கண் வினையே சிறப்புடைமையின் இங்ங்னம் வகுத்தோதினார். உரைக்குறிப்பு: இந்நூற்பாவிற்கு உரை இல்லை என்று புலிசை ஏடு கூறுகிறது அச்சுப்பிரதியில் இரண்டு உரைகள் உள்ளன. அவற்றுள் முதல் உரை நச்சினார்க்கினியா உரையாகவே உள்ளது. இரண்டாவது உரை சேனாவரையர் உரையுடன் ஒருவாறு இத்து உள்ளது. சேனாவரையர் இந்நூற்பா உரையுள், இலக்கணச் சூத்திரங்களே அமையும் இச் தத்திரம் வேண்டா பிறவெனின் என்னும் வினாவை எழுப்பிக்கொண்டு. இருவகைய என்னும் வரையறை அவற்றாற் பெறப்படாமையானும், வகுத்துப் பின்னும் இலக்கணங் கூறியவழிப் பொருள் இனிது விளங்குதலானும் இச்சூத்திரம் வேண்டுமென்பது' என்று எழுதுகிறார். இவர் இவ்வாறு எழுதுவதை நோக்கினால் இந்நூற்பா வேண்டா நூற்பாவாகக் கருதப்பட்டு வந்ததென்ற உண்மை புலனாகிறது. அதனால் இந்நூற்பா தொல்காப்பயா இயற்றிய நூற்பா அன்று போலும். அடிகள். பதிப்பு 7.5 (பக் 乓昌 吊阜1