பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லதிகாரம் 2. வேற்றுமையியல்" 547-53 வேற்றுமை தாமே! யேழென மொழிப. I தெய்வச். அடுத்த நூற்பாவையும் இதனோடு சேர்த்து ஒரே நூற்பாவாகக் கொண்டுள்ளார். பா.வே. 1. தானே - சுவடி 73, 164. 548-64 விளிகொள் வதன்கண் விளியொ டெட்டே 2 549-65 "அவைதாம் பெயரை யொடுகு இன்னது கண்விளி யென்னு மீற்ற'. & பா.வே. 1. யென்னுமீதே - சுவடி 48 கண்விளியற்ற - சுவடி 115. இது அடிகள் கொண்ட பாடம். கண்விளியீற்றது - சுவடி 1. அவை எழுவாய், இந்த ஒருமை பொருந்தாது. இவ்வியலைத் தெய்வச். வே ற்றுமையோத்து எனச் சுட்டுகிறார். தெய்வச். உரையடங்கிய சுவடி 951இலும் ஒத்து என்பதே பாடம். டி அடிகள். தம் பதிப்பு 76இல் இந்நூற்பாவைப் பின்வரும் வடிவில் பதிப்பித்துள்ளார். அவைதாம் பெயரே ஐயொடுகுஇன் அதுவிளி பீற்ற. அவர் பாடக்குறிப்பு என்னும் தலைப்பில் கூறுவதாவது"புலிசை ஏட்டிலும், துறைசை ஏட்டிலும் மேற்கண்டவாறு நூற்பா அமைப்பும் பாடமும் உள்ளன. சேனாவரையர். நச்சினார்க்கினியர் தெய்வச்சிலையார். கல்லாடனார் உரைப்பதிப்புகளில், அவைதாம் பெயர்ஐ ஒடுகு இன்.அது கண்விளி யென்னு மீற்ற. என்ற அமைப்பும் பாடமும் உள்ளன. இளம்பூரணர் என்னும் என்கின்ற சொல்லை வைத்து உரை எழுதவில்லை. சேனாவரையர் அச்சொல்லை வைத்து உரையெழுதுகிறார். நன்னூலாசிரியரும் ஏட்டிலுள்ள பாடம்போல், பெயரே என்று எழுவ ாய் வேற்றுமையை ஏகாரங்கொடுத்துப் பிரித்தே கூறுகிறார். சேனாவரையர் நூற்பாப்பாடம் போலவே இளம்பூரணர் உரையுள் நூற்பாப் பாடத்தை எழுதுவோர் திருத்திவிட்டனர். (பக். 73)