பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேற்றுமையியல் I 05 563-79 வண்ணம் வடிவே யளவே சுவையே தண்மை வெம்மை யச்ச மென்றா நன்மை தீமை" சிறுமை பெருமை வன்மை மென்மை கடுமை யென்றா முதுமை யிளமை சிறத்த லிழிதல்' புதுமை பழமை யாக்க மென்றா(வ்) இன்மை யுடைமை நாற்றந் தீர்தல் பன்மை சின்மை பற்று விடுதலென்(று) அன்ன பிறவு மதன்பால வென்மனார். 17 பா.வே. 1. தின்மை - பதிப்பு 4 2. இழித்தல் - 4, 9, 39, 49, 60, 76, 78 ஆகிய எல்லாப் பதிப்புகளிலும் இழித்தல் என்பதே பாடம். அடிகள். ஒருவர் மட்டுமே இழிதல் எனப் பாடங்கொண்டுள்ளார். இழித்தல் என மூலத்தில் இருப்பினும் உரையில் அனைவரும் இவனின் இழிந்தான் இவன் எனத் தன்வினையாகவே பொருள் கூறுகின்றனர். மேலும் சிறத்தல் என்னும் தன்வினைக்கு எதிராக இழிதல் என்னும் தன்வினைச்சொல்லே பொருத்தமானது. 564–80 ஆறா குவதே(ய்) அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி தன்னினும் பிறிதினு மிதன திதுவெனும்' அன்ன கிளவிக் கிழமைத் ததுவே. 18 இளம்பூரணரும், கல்லாடரும் அடுத்த நூற்பாவையும் இதனோடு இணைத்து ஒரே சூத்திரமாகக் கொண்டுள்ளனர். பா.வே. 1. இதனினிது - சுவடி 164. நுதலும் பொருள் அது உருபுதான் இன் அன்று. இப்பாடம் பிழை. இதன. திதுவென்னும் - சுவடி 115. எனும் விரிக்கப்பெற்றுள்ளது.