பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளிமரபு 119 624-140 தானென் பெயருஞ் சுட்டுமுதற் பெயரும் யானென் பெயரும் வினாவின் பெயரும் அன்றி யனைத்தும் விளிகோ ளிலவே. 20 6.25-141 ←oሄ® மருவு' மீரொடு சிவனும். 2I பா.வே. 1. மரூஉ - பதிப்பு 49இல் சு.வே. எழுத்துப்பிழை. மர்உம்- சுவடி 48. எழுத்துப்பிழை. ஆரும்.அறிவும் - பதிப்பு 76இல் அச்சுப்பிழை. 626-142 தொழிற்பெய ராயி னேகாரம் வருதலும் வழுக்கின்' றென்மனார் வயங்கி யோரே'. 22 பா.வே. 1. வழக்கின்’ - பதிப்பு 49இல் சு.வே. எழுத்துப்பிழை, ழு>ழ 2. வயங்கிசினோரே - சுவடி 48

27-143 பண்புகொள் பெயரு மதனோ ரற்றே. 23

628-144 அளபெடைப் பெயரே யளபெடை யியல. 24 இந்நூற்பா சுவடி 73இல் எழுதப்படவில்லை. 629-145 சுட்டுமுதற் பெயரே முற்கிளந் தன்ன. 25 டி டாக்டர் தெ.பொ. மீனாட்சி சுந்தரத்தின் கல்லாடப் பதிப்பில் வழுக்கின்று என்பதற்கு வழக்கின்று என்ற பாடம் உள்ளது. ஏகாரம் வந்தால் குற்றமில்லை என்பதற்கு ஏகாரம் வருதல் வழக்கில்லை என்று பொருள் நிலையில் இது முரணான பாடமாக உள்ளது. வழக்கின்று என வரும் இப்பாடம் ஏற்கத்தக்கதன்று. வழக்கில்லா ஒன்றுக்குத் தொல்காப்பியர் நூற்பா செய்தார் எனக்கொள்ளல் பொருந்துவதாக அமையாது. ஏகாரம் வருதலும் வழுக்கின்று என்றதனால் ஏகாரம் பெறாது. ஈரொடு சிவனலே பெரும்பான்மை என்பதாம். எனச் சேனாவரையர் இங்கு விளக்கம் வரைந்துள்ளார். சேனாவரையர் இங்ங்ணம் குறிப்பிட்டமையால் பிற்காலத்தில் வழக்கின்று என்ற பாடம் தோன்றியிருக்கலாம் என்று கருத முடிகின்றது. வெ.ப. (பக். 186)