பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயரியல் 139 667-183 பெண்மை சுட்டிய வெல்லாப் பெயரும் ஒன்றற்கு மொருத்திக்கு மொன்றிய நிலையே. 25 668-184 ஆண்மை சுட்டிய வெல்லாப் பெயரும் ஒன்றற்கு மொருவற்கு மொன்றிய நிலையே. 27 669-185 பன்மை சுட்டிய வெல்லாப் பெயரும் ஒன்றே பலவே யொருவ ரென்னும் என்றிப் பாற்கு மோரன் னவ்வே. 28 பா.வே. 1. ஒன்றிப்ப ாற்கு- பதிப்பு 76 அன்றிப்பாற்கு - பதிப்பு 78; இதற்குச் சுவடிச் சான்றில்லை. 670-186 ஒருமை சுட்டிய வெல்லாப் பெயரும் ஒன்றற்கு மொருவற்கு" மொன்றிய நிலையே. 29 பா.வே. - 2. ஒருமைச் சுட்டிய - சுவடி 48. உறழ்முடிபு.

  1. ஒருவர்க்கு - சுவடி 41A, 1044 பதிப்புகள் 4, 20, 38, 39, 67, 76.

+ " அகரச்சுட்டு அன்றி எனத் திரிந்து நின்றது. உரையாசிரியன்மார் என்றிப் பாற்கும். எனப் பாடங்கொண்டனர். என்னும் என முற்கூறியபின்னர் அப்பொருட்டாகிய என்று என்பதனைப் பின்னும் கூறுதல் பொருந்தாமையறிக. அன்றி என்னும் அகரச் சுட்டினது இன்றியமையாமையை அவர் ஒர்ந்திலர். பால. (பக். 205) இந்நூற்பாவின் உரைகளைக் காண்போம்:இளம் - ஒருமை சுட்டிவரும் மூன்று பெயரும் அஃறிணை ஒருமைக்கும் உயர்திணை ஒருமைக்கும் உரிய (அடிகள். இது சேனா உரையுடன் பெரும்பாலும் ஒத்துள்ளது என்கிறார். பதிப்பு 7.6 பக். 151) சேனா. இளம்பூரணருடையதே. நச்சர் அஃறிணையில் ஒன்றற்கும் உயர்தினையுள் ஒருமைக்கும் பொருந்திய நிலைமையை உடையனவாகும். கல்லாடர் - அஃறிணையில் ஒன்றற்கும் உயர்தினையுள் ஒருவர்க்கும் நிற்றல் பொருந்தின. ஒன்று என்பதனை அஃறிணை ஆண்பால் மேலும் பெண்பால் மேலும் கொள்க. ஒருவர் என்பதனை உயர்திணை இருபான் மேலும் கொள்க. (தெ.பொ.மீ. பதிப்பு (49)இல் உள்ள இன்றியமையாத இந்தப் பத்தி கழகப் பதிப்பில் (43) காணப்படவில்லை.) இவ்வுரைகளைக் கூர்ந்து நோக்குமிடத்துக் கல்லாடர் ஒருவர்க்கு எனப் பன்மையில் கொண்டதையும். ஏனையோர் யாவரும் ஒருவற்கு என ஒருமையில் கொண்டதையும் அறிய முடிகிறது. ஒருமைப்பாடம் இப்பதிப்பில் ஏற்கப்பட்டது. ப.வெ.நா.