பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினையியல் 141 715-231 அவற்றுள் முதனிலை மூன்றும்' வினைமுதல் முடியின. பா.வே. 1. மூன்று - சுவடி 951 பிழை. உம்மை இன்றியமையாதது. 716-232 அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றிற்' சினையொடு முடியா முதலொடு முடியினும் வினையோ ரனைய வென்மனார் புலவர். 32 பா.வே. 1. தோன்றிச் - தெய்வச். பாடம். இவர் இதை எச்சமாகக் கொண்டு, 'தோன்றி சினைவினையோடு முடியாது. முதல்வினையோடு முடியினும், அச் சினைவினையான் முடிந்ததனோடு ஒக்கும்' என்கிறார். ஏனையோர் தோன்றினால் எனக் கொண்டனர். 717-233 ஏனை எச்சம் வினைமுத லானும் ஆன்வந் தியையும் வினைநிலை யானும் தாமியன் மருங்கின் முடியு மென்ப.' 3.3 பா.வே. 1. மென்க - சுவடி 951 பிழை. என்ப. என்மனார் என்பதே மரபு. 718-234 பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி சொன்முறை முடியா தடுக்குந வரினும் முன்னது முடிய முடியுமன் பொருளே’ 34 பா.வே. 1. தடுக்குன - சுவடி 48, 115, 951, 1052 பதிப்பு 76இல் சு.வே. + "இங்கனம் வினையெஞ்சு கிளவி அடுக்கிவந்து கொள்ளும் முடிபு கூறியாங்குப் பெயரெச்சம் அடுக்கி வந்து முடிபு கோடல் பற்றிப் பெயரெச்சத்து அதிகாரத்து ஆசிரியர் கூறியிருத்தல் வேண்டும். அவ் விலக்கணச் சூத்திரம் ஆண்டுக் காணப் பெறாமையான் மறைந்து போயிருத்தல் வேண்டும்". பால. (பதிப்பு 78 பக். 259) i.