பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 சொல்லதிகாரம் 729–245 'வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல் எதிர்மறுத் துணர்த்தற்’ குரிமையு முடைத்தே. 45 பா.வே. 1. வினாவிடை - சுவடி 48 எழுத்துப்பிழை. வு > வி 2. துணர்த்துதற் - பதிப்புகள் 3, 4, 20, 38, 49 730-245 வாராக் காலத்து வினைச்சொற் கிளவி(ய்) இறப்பினு நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்றும் இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை, 731-247 "செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே. 47 732-248 இறப்பே யெதிர்வே யாயிரு காலமுஞ் - சிறப்பத் தோன்று மயங்குமொழிக் கிளவி 48 - * 733-249 ஏனைக் காலமும் மயங்குதல் வரையார் . 47 வினையியல் முற்றும் + 'வன்புற வரூஉம்' என்னும் தத்திரமும் இச் சூத்திரமும் எச்சவியலுள் இருத்தல் வேண்டும். பால. (பக். 273) "இந்த) இரு நூற்பாக்களும் கால மயக்க அதிகாரத்தில் இயைபின்றி வினையியலுள் இடம்பெற்றுள்ளன எனவும், அவை எச்சவியலுள் உரிய இடத்தில் இருத்தல் வேண்டும் எனவும் சுட்டுகின்றார். இவர் கருதும் இடமாற்றங்கள் மிகப் பொருத்தமானவையே." தி.வே.கோ. (பதிப்பு 78 பக் XII)

  • இந் நூற்பாவையடுத்துத் தெய்வச்சிலையார் இறப்பி னிகழ்வின் எவ்வயின் வினையும், அவைதாந் தத்தங் கிளவி (எச்ச. 30-32) என்றும் மூன்று சூத்திரங்களையும் வினையியவிற் கொண்டுள்ளார்.

"வினைச்சொற்கள் முற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் என மூவகைப் படும். அவற்றுள் பெயரெச்சம் வினையெச்சம் என்பன இத்தன்மைய என்று எடுத்தோதி முற்றுச் சொல்லாவது இத் தன்மையது என்று ஒதிற்றிலர். அதற்கு இலக்கணம் யாங்குப் பெறுதும் எனின் எச்சவியலுட் பெறுதும். வினைக்கு இன்றியமையாத முற்றினை ஒழிபியல் கூறுகின்றுழிக் கூறிய அதனால் பெற்றதென்னை எனின் அஃது எமக்குப் புலனாயிற்றன்று. அஃதேல் வினையிலக்கணம் அறிந்தே னாகுங்கால் முற்றிலக்கணமும் அறிதல் வேண்டுமன்றே அதனை ஆண்டுக் கூறியவாறு ஈண்டுரைத்தல் வேண்டும்." பால எச்சவியலின் 30-32 நூற்பாக்கள் வினையியலின் செய்தென்னெச்சத்து (42)