பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினையியல் 145 என்னும் சூத்திரத்தையடுத்து இருத்தல் வேண்டும் எனக் கருதுகிறார். அவர் கூறுவது - "உயர்தினை வினைகளைக் கூறுமிடத்துப் பன்மையுரைக்கும் தன்மைச் சொல்லே (5) தன்வினை யுரைக்கும் தன்மைச் சொல்லே (6) படர்க்கைச் சொல்லே (9) எனவும், அஃறினை வினைகளைக் கூறுமிடத்துப் பலவற்றுப் படர்க்கை (19), ஒன்றன் படர்க்கை (20) எனவும் கூறி, விரவுவினைகளைக் கூறுமிடத்து எச்சவினை ஒழிந்தவற்றை 'முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி இன்மை செப்பல் வேறென் கிளவி (25) எனக் கூறியதன்றி அவை முற்றி நிற்கும் என்பதையும், இன்னவாறு முடியும் என்பதையும். அடுக்கியும் வரும் என்பதையும் பற்றிக் கூறினாரில்லை. இன்றியமையாத அவ் விலக்கணங்களை வினையியலுட் கூறாமல் யாதொரு காரணமுமின்றி எச்ச வியலுட் கூறினார் எனக் கோடல் பொருந்துமாறில்லை. முற்றி நிற்றல் உயர்திணை வினை. அஃறிணை வினை விரவு வினை மூன்றற்கும் எய்தும் இலக்கணமாதலின் அம் மூன்றற்கும் உரிய சிறப்பியல்களைக் கூறிய பின்னர், இப் பொதுவியல்பாகிய இலக்கணங்களைச் செய்தென்னெச்சத்து (42) என்னும் தத்திரத்தின்பின் வைத்து ஒதியிருத்தல் வேண்டும். " (பதிப்பு 78 பக். 390) "முற்று வினைச்சொல் பற்றிய மூன்று நூற்பாக்கள் எச்சவியலில் உள. இவை அவ்வியலில் இருத்தல் பொருத்த மில எனவும். உரையெழுதுவோர் தவறாகக் கருதி அவ்வியலில் சேர வைத்தனர் எனவும். வினையியலிற்றான் இவை சேரற் குரியன எனவும் கருதிய தெய்வச்சிலையார் வினையியலிறுதியில் இவற்றைச் சேர்த்துக் கொண்டு உரையெழுதியுள்ளார். இவ்விடப் பெயர்ப்பு மறித்த பார்வையாலெழுந்தது. இதனை இன்னும் மறித்துப் பார்த்த தெய்வச்சிலை விளக்கவுரையாளர் சுந்தரமூர்த்தி. தெய்வச்சிலையாரின் சிந்தனையைப் பாராட்டி இம்மூன்று நூற்பாக்களையும் வினையியலின் முதற்கண் வைத்திருப்பின் இன்னும் நலமாக இருக்குமெனவும், முற்றுக்களுக்குரிய ஈறுகளைச் சொல்லிவரும் முதற்கண்ணே முற்றின் இலக்கணமும் ஒருசேர இருத்தல் வேண்டுமெனவும். நன்னூலாரும் வினையியலில் முற்று. பெயரெச்சம், வினையெச்சம் என்ற வைப்புமுறையையே கொண்டுள்ளா ரெனவும் இடப்பெயர்ப்புக்கு மேலும் ஒரு சிந்தனை வழங்குவர். இங்ங்ணம் மறித்த சிந்தனைக்கு வரம்புண்டா? அமைப்பு முறையில் நன்னூலை ப்ெபட்டுத் தொல்காப்பியத்தைப் பார்க்கலாமா? எச்சத்திலிருந்து முற்றுப் பிறந்தது என்ற கொள்கையுமுண்டு. அதன்படி வினையியற் தத்திரங்களை மறுபடியும் மறித்து மாற்றியமைக்கலாமா? இங்ங்னம் உரையாளர் எண்ணப்படி யெல்லாம் எடுத்துவைத்துக் கொள்ளலாகாது என்பதற்குச் சேனாவரையர் சான்றாவார்" வ.சுப.மா. - தொல்காப்பியக் கடல் - பக். д. А - Д, "Т