பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடையியல் 149 751-267 தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே 18 - H. - 1 ■ 752-268 அந்தி லாங்கு அசைநிலைக் கிளவியென்(று) ஆயிரண் டாகு மியற்கைத் தென்ப" 19 பா.வே. 1. அந்தில் ஆங்க வசைநிலை" - பதிப்புகள் 38, 18, 78 2. இயற்கைய வென்ப - சுவடி 73 பதிப்பு 78 பதிப்பு 38இல் சு.வே. 753-269 கொல்லே ஐயம். 20

754-270 என்லே விலக்கம்" 21 டி அடிகள். தம் பதிப்பு 78இல் ஆங்க என்பது பிழையான பாடம் எனக் குறித்துள்ளார். (பக். 222 அடிக்குறிப்பு) அவர் மேலும் கூறுவதாவது - தொல். அகத்திணை 44 ஆம் நூற்பாவுரையில் காவல் பாங்கின் ஆங்கு ஒர் பக்கமும் என்பதன் உரையில் இளம்பூரணர் ஆங்கு என்பது இடங்குறித்து நின்றது. 'நின்னாங்கு வரூஉமென் நெஞ்சினை (கலி. பாலை. 22) என்றாற்போலக் கொள்க என்பர். அதனால் ஆங்கு என்றே பாடம் ஒதுக. ஆங்க என்பதாயின் அது உரையசையாகும். சேனாவரையரும் இந் நூற்பா உரையுள் ஆங்கு வரும் என்றவாறாம்'என்று உரைப்பர். பால. தம் பதிப்பு 78இல் ஆங்க என்றே பாடங்கொண்டு. "ஆங்கு என்பது பாவோசை கருதி ஆங்க என விகாரமாய் நின்றது" என்கிறார். வெள்ளைவாரணனாரும் இதே கருத்தைக் கூறுகிறார். (பதிப்பு 48) நன்னூல், இலக்கண விளக்கம், முத்துவீரியம் ஆகிய இலக்கணங்கள் யாவும் ஆங்கு என்ற சொல்லையே ஆளுகின்றன. இலக்கியத்தும் ஆங்கு என்பதையே பரவலாகக் காண்கிறோம். ஆங்கு என்பதன் விகாரப்பட்ட வடிவம் ஆங்க எனக் கூறுவதால் பெறும் பயன் ஒன்றுமில்லை. தொல்காப்பியத்தில் விட்டிசை மிகப் பலவாக இடம்பெற்றுள்ளது. இங்கும் ஆங்கு அசைநிலை என விட்டிசைப்பதில் தவறேதுமில்லை. பழமை, இலக்கண இலக்கிய ஆட்சி. விட்டிசைக்கும் மரபு ஆகியன பற்றி இப் பதிப்பில் ஆங்கு என்னும் பாடமே கொள்ளப்படுகிறது. ப.வெ.நா.

  • அந்தில் என்னும் ஒருமை எழுவாய்க்கு இயற்கைத்து என்ப என்னும் ஒருமைப்

பயனிலையே ஏற்புடையது.

  • இளம் விளக்கம் எனப் பாடங் கொள்கிறார். ஆனால் இவரே செய்யுளியல் 206 ஆம் நூற்பா உரையில் எல்லே இயக்கம் என்கிறார். இச் சூத்திரத்திற்கு துதலியதும் உரையும் இளம்பூரணத்தில் இல்லையாதலின் அவர் கொண்ட பாடம் இதுதான் என உறுதியாகக் கூற இயலவில்லை. விளக்கம் என்ற பாடம் 73. 115 ஆகிய சுவடிகளிலும். பதிப்பு 18 இலும், பதிப்பு 38 இல் சு.வே. ஆகவும் காணப்படுகிறது

/தொடர்ச்சி அடுத்த பக்கம்,