பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிய படி 1.59 800-316 அதிர்வும் விதிர்ப்பு நடுக்கஞ் செய்யும். I9 பா.வே. 1. விதுப்பு - சுவடி 115, 951, 1044, 1053 எழுத்துப்பிழை. விதிர்வு - தெய்வச் பாடம். பதிப்புகள் 20, 80 2. நடுக்கும் - பதிப்பு 76 இல் சு.வே எழுத்துப்பிமுை. 801-317 வார்தல் போக லொழுகல் மூன்றும் GHւ நெடுமையுஞ் செய்யும் பொருள. 20 பா.வே. 1. தேர்வு - சுவடி :15, 1244 பதிப்பு 3 பதிப்பு 38இல் சு.வே. இலக்கன உ எகக- 254 802-318 தீர்தலுந் தீர்த்தலும் விடற்பொருட் டாகும். 21 டி இதன் உரையில் சேனா, "அதிழ்வு என்று பாடம் ஓதி அதிழ்கண் முரசம் என்று உதாரனம் காட்டுவாரும் உளர்" என்கிறார். இப்படிக் காட்டுவார் யார் என விளங்கவில்லை. "சேனா அதிழ்கண் முரசம் என உதாரணம் காட்டுவர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இளம், அதிர்வு என்பதற்கு அதிர்கண் முரசம் என்பதையே உதாரணமாகக் காட்டியுள்ளார். இவ்வுதாரணத்தையே அதிழ்கண் முரசம் எனக் காட்டுவதை நோக்க இலக்கியத் தொடரில் ஏற்பட்ட பாடவேறுபாடு காரணமாக இலக்கண நூலுள்ளும் இவ் வேறுபாடு இடம்பெற்றது எனலாம். மிகுதியும் பொருள் வேறுபாடு இன்மையாலும் சேனா உள்ளிட்ட அனைத்து உரையாசிரியர்களும் இதனைப் பாடமாக ஏற்காமையாலும் அதிர்வு என்ற பாடமே ஏற்கத் தக்கது. வெ.ப. (பக். 191) பால அதிழ்வெனப் பாடமோதி அதிழ்கண் முரசு என்று உதாரணம் காட்டுவாரும் உளர் எனச் சேனா குறித்துள்ளமையின் இதன் உண்மைப்பாடம் அதிழ்வென்பதே எனத் துணியலாம் என்னை? அதிர்வென்பது பெயர்வினைகட்கு முதனிலையாக வரினும் தனித்து வரினும் பொருள் வேறுபடாமையின் அஃது பாடமாதற் கியையாமை அறியலாம் "என்கிறார். (பதிப்பு 78 பக். 317) விளக்க உரையில் இவ்வாறு கூறியிருந்தாலும் இவரும் கொண்டுள்ள மூலபாடம் அதிர்வு என்பதே. மேலும் ஒர் அறக்கட்டளைச் சொற்பொழிவில், "உரியியலுள் அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும்'என்னும் நூற்பாவின் உரையில் அதிழ்வெனப் பாடமோதுவாரும் உளர் என்பார். இப் பாடம் பொருந்துமாறில்லை" (த.நூ.பா.வே. பக். 71) என்கிறார். 1988க்கும் 1993க்கும் இடையே பால. தம் கருத்தை மாற்றிக் கொண்டு விட்டதற்கான காரணம் விளங்கவில்லை. ப.வெ.நா.