பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii 10. நூ. 593இல் ஆர் ஆர் ப என வரூஉம் என்பழிப் ப என பவென. பவ்வென என்ற மூன்று வடிவங்களும் அச்சுப் பதிப்புகளில் காணபபெறுகின்றன. இவற்றுள் பவ்வென எனலே நேரிது. இவற்றை நோக்கின் விட்டிசைத் தெழுதல் சில இடங்களில் ஆசிரியர் கருத்தாக விருத்தலொல்லா தென்பது உம், உடம்படுமெய் புணர்த்தெழுதுதலும் விட்டிசைத்தெழுதுதலும் எழுதுவோரின் உள்ளக்கருத்திற்கேற்ப வமைதல் கூடுமென்பது உம் பெறப்படும். சில மாறாட்டங்கள் வயின் என்றவிடத்து வையின் என்று ஏடுகளில் பலவிடங்களில் தவறாகக் காணப்படுகிறது. எனினும், "சுட்டுமுதல் வயினும் எகர முதல் வயினும் அப்பண்பு நிலையும் இயற்கைய என்ப" (335) என்னுமிடத்து இத்தவறு நிகழாமை வியப்பிற்குரியது. ஆகல் வந்தவிடத்து ஆதல் என்பது பல இடங்களில் L - வேறுபாடாகக் காணப்பெறுகிறது. ஏட்டில் ககரம் தகரமாகக் காணப்பெறக் கூடுமாகையால் இப் பாடவேறுபாடு அமைந்திருக்கலாம். உட்பட, உளப்பட என்ற வடிவங்களும் ஆங்காங்கு மாறிமாறி வந்துள்ளன. வருகாலை, வருவழி யென்பன சில இடங்களில் வருங்காலை, வரும்வழி என விரித்தெழுதப்பட்டுள்ளன. இவற்றால் பொருள் வேறுபாடு நேராது எனினும் ஒசைநலம் முதலியன கருதிப் பாடம் அறியப் பெறுதல் வேண்டும். நன்மை தீமை என்புழி (நூ. 583) தன்மை தின்மை என்ற பாடபேதம் ஒன்று காணக்கிடைக்கிறது. தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே (கம்பர். தனியன்) என இலக்கிய ஆட்சியும் (காண்க : சிவபோக சாரம் 99, 90). கல்வெட்டில் ஆட்சியும் தின்மை என்ற சொற்கு உண்டு. ஆகு.ை வருன, திரின போன்ற வடிவங்களில் ஒனனகரமாகவே (ண்) சுவடிகளிற் காணப்பெறும் முதற் பதிப்புக்களிலும் அங்ங்னமே. பின்னர்ப் பதித்தோர் அவற்றைத் தந்நகரமாக்கினார். (ந) 4. உறழே, உறழ்வே என்ற வடிவங்களும் மாறிமாறிக காணப்பெறும். சுவடிகளில் உறழ் என்ற வடிவமும் உண்டு. ■■ பு - வு என்ற வடிவங்கள் பொருள் வேறுபாடின்றிப் பயன்படுத்தப் பெறுகின்றன. அளபு - அளவு உருபு - உருவு நேர்பு - நேர்வு பிரிபு - பிரிவு: உயர்பு - உயர்வு சார்பு - சார்வு முடிபு - முடிவு திரிபு - திரிவு இழிபு -