பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எச்சவியல் IB1 932-448 கொடுவென் கிளவி படர்க்கை யாயினுந் தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பின் தன்னிடத் தியலு மென்மனார் புலவர். *_* o 933-449 பெயர்நிலைக் கிளவியி னாஅ குதவும்' திசைநிலைக் கிளவியி னாஅ குதவுந்' தொன்னெறி மொழிவயி னாஅ குதவும்! மெய்ந்நிலை மயக்கி னாஅ குதவும்' மந்திரப் பொருள்வயி னாஅ குதவும்' அன்றி யனைத்துங் கடப்பா டிலவே. 5& பா.வே. 1. அகுனவும் - சுவடி 34, 115, 1052 பதிப்பு 76 இல் சு.வே. . H. - - o - * - 2. சினை நிலைக்' - இளம்பூரணர் மட்டும் கொண்ட பாடம். 3. மெய்நிலை - சுவடி 48, 1052, 1053. பிழை, நகரமெய் வேண்டும். 934–450 செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல் செய்யென் கிளவி யாகிட னுடைத்தே. 54 + "ஒரு சில சொற்களின் வழுவமைதியைக் கூறும் எச்சவியல் நூற்பாவில் (சொ. 413) சினைநிலைக் கிளவி ஆஅ குதவும் என்ற தொடர் இளம்பூரணர் பாடமாக உள்ளது. இதற்குத் திசைநிலைக் கிளவியின் ஆஅ குதவும் என்பதைப் பிற உரையாசிரியர்கள் பாடமாகக் கொண்டனர். இளம்பூரணர் தான் கொண்ட சினைநிலைக் கிளவி என்பதற்கு வெண்கொற்றப் படைத் தலைவன். வெள்ளேறக் காவிதி என்பனவற்றை உதாரணமாகக் காட்டுவர். திசைநிலைக் கிளவி என்பதற்குத் திசைச்சொல்லிடத்து வாய்பாடு திரிந்து வருவன என விளக்கங் கூறி, அவை புலியான் பூசையான் என்னும் தொடக்கத்தன என உதாரணமும் காட்டுவர் சேனாவரையர். நச்சர். இளம்பூரணர் சினைநிலைக் கிளவிக்குக் கூறும் உதாரணங்களைச் சிறப்பினாகிய பெயர்நிலைக் கிளவி என்பதில் அடக்கி மொழிந்துள்ளார். நச்சர். கருத்துப்படி இளம்பூரணர் கூறும் சினைநிலைக் கிளவி பெயர்நிலைக் கிளவியின் ஒருவகையே என்பது அறியப்படும். எனவே திசைநிலைக் கிளவி என்னும் பாடம் வேறுபட்ட பொருளைச் சுட்டுவதாய் அமைந்துள்ளமையால் சிறந்த பாடமாகக் கொள்ளத்தக்க நிலையில் உள்ளது. வெ.ப. (பக். 193-194)