பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாட்சியிங் கிதனின்மேல் தருவ தென்னினி மாட்சியோர் குரங்கினால் அழிதன் மாலைத்தே ஆட்சியும் அமைவுமென் னரசு நன்றெனா சூட்சியின் கிழவரை நோக்கிச் சொல்லினான். i. (சில பதிப்புகளில் இச்சொற்கள் தாழ்ச்சி, சூழ்ச்சி எனக் காணப்படுகின்றன.) புகழ்ச்சி என்ற சொல் வீரசோழியத்தில் புகட்சி என்று ஆளப்பட்டுள்ளது. (காரிகை 106, 151) மூலத்தில் மட்டுமன்றி உரையிலும் புகட்சி - புகழ் (காரிகை 106) என வருகிறது. இவற்றின் தாக்கத்தால் ப)ே சுவடிகளில் தொல்காப்பியப் பாடவேறுபாடுகள் தோன்றியுள்ளன. கொடிநிலை கந்தழி (1037) என்னும் நூற்பாவில் கடவுள் வாழ்த்தொடு என இருத்தல் வேண்டியது சுவடி 1065இல் வாட்த்தொடு என்று உள்ளது. இதே சுவடியில் வழக்கியன் மருங்கின் (1038) என்ற நூற்பாவில் புகழ்ச்சியும் என்பதற்குப் புகட்சியும் என எழுதப்பட்டுள்ளது. வாக்கிய பேதம் ஒரு நூற்பாவில் ஒரு விதிதான் கூறப்பட வேண்டும் என்பதுவும், ஒன்றுக்கு மேற்பட்ட விதிகளைக் கூறக்கூடாதென்பதுவும் வடமொழி இலக்கண நெறியாகும். அவ்வாறு பல விதிகளைக் கூறுதல் வாக்கிய பேதம் என்னும் குற்றமாகக் கருதப்படும். "குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி யறிதல்' குறைத்தன வாயினும் நிறைப்பெய ரியல" என்னும் எச்சவியல் சூத்திரங்கள் இரண்டையும் (937, 938) இளம்பூரணர் ஒரே சூத்திரமாகக் கொண்டுள்ளார். சுப்பிர, தம் சொல்லதிகாரக் குறிப்பு என்ற நூலில் "இங்கனம் ஒரே நூற்பாவாகக் கறுதல் பொருந்தாது, வாக்கிய பேதம் என்னும் குற்றம் வரும்" என்பர் (பக். 23) இங்ங்னமே இரண்டாகுவதே (556) காப்பி னொப்பன் (557) என்னும் நூற்பாக்கள் இரண்டையும் இளம்பூரணர் ஒன்றாகக் கொண்டார் அதற்குக் காரனம் " அவ்விரண்டும் ஒரு வேற்றுமை பற்றிக் கூறுதல் போலும் என்று கூறும் சுப்பிர. அவ்வாறு ஒரே குத்திரமாகக் கொள்ளின் வாக்கிய பேதம் எனும் குற்றம் வரும்" ଐtitly MT. "வாக்கிய பேதமாவது விதி கூறுமிடத்து ஒன்றைக் கருதி ஒன்றையே விதிக்கலாமேயன்றிப் பலவற்றைக் கருதிப் பலவற்றை விதித்தல்" என்பர் சுப்பிர.